வந்தியத்தேவனுக்கு முன்னாடி விருமன் வரான்.. டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் எப்போ, எங்கே தெரியுமா?

சென்னை: இந்த ஆண்டு முதல் பாதியில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், விக்ரம் என மாஸ் காட்டிய நிலையில், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து மூன்று பெரிய படங்களை களமிறக்க காத்திருக்கிறார் கார்த்தி.

அதில், முதல் படமாக வரும் ஆகஸ்ட் 12ம் தேதி முத்தையா இயக்கத்தில் கிராமத்து மண் வாசனையும் வீரமும் கலந்து உருவாகி உள்ள விருமன் படம் வெளியாகிறது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 2டி தற்போது வெளியிட்டுள்ளது.

பருத்திவீரன் டு விருமன்

பருத்திவீரன் டு விருமன்

பருத்திவீரன், கொம்பன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் கிராமத்து பேக்ட்ராப்பில், வீரத்தை சொல்லும் விருமன் படத்தில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி. கொம்பன், குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி உள்ள விருமன் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது.

அதிதி ஷங்கர் அறிமுகம்

அதிதி ஷங்கர் அறிமுகம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான செஸ் ஒலிம்பியாட் பாடலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிருந்தா மாஸ்டர் கொரியோகிராஃபியில் அழகாக நடனமாடி அசத்தியிருந்த அதிதி ஷங்கருக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலர், இசை வெளியீட்டு விழா

டிரைலர், இசை வெளியீட்டு விழா

ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ள விருமன் படத்திற்கு புரமோஷன் செய்யாமல், செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு புரமோஷன் செய்துக் கொண்டிருக்கிறாரே கார்த்தி என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையி,ல் பிரம்மாண்டமாக டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற போவதாக 2டி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

எங்கே, எப்போது

எங்கே, எப்போது

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை 2டி நிறுவனம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

RajaRaja Cholan Interesting facts | தமிழர்களின் பெருமிதம், Ponniyin Selvan *India | OneIndia Tamil
பிரம்மாண்ட லைன் அப்

பிரம்மாண்ட லைன் அப்

இந்த ஆண்டின் முதல் பாதியை அண்ணன் சூர்யா ஆக்கிரமித்த நிலையில், இரண்டாம் பாதியில் தம்பி கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று பெரிய படங்களை களமிறக்க காத்திருக்கிறார். வந்தியத்தேவனுக்கு முன்னாடி விருமனாக ரசிகர்களை மகிழ்விக்க போகிறார் நடிகர் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X