»   »  அஜித்துக்கு சிக்கல் கொடுக்கும் விஷால் - வெளிமாநில ஷூட்டிங் ரத்து ஏன்?

அஜித்துக்கு சிக்கல் கொடுக்கும் விஷால் - வெளிமாநில ஷூட்டிங் ரத்து ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தின் விசுவாசத்தை நிறுத்திய விஷால்!- வீடியோ

சென்னை : அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு போட்டு அஜித்துக்கு சிக்கல் கொடுத்துதுள்ளார் விஷால்.

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க விஷயங்களில் அஜித் கலந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு சிக்கல் கொடுக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள்.

விசுவாசம்

விசுவாசம்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் படம் 'விசுவாசம்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

ஷூட்டிங் ரத்து

ஷூட்டிங் ரத்து

'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. அங்குள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்காக செட்டும் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஷூட்டிங் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்கிற போராட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மார்ச் 16 முதல் தமிழகத்தில் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

கண்டுகொள்ளாத அஜித்

கண்டுகொள்ளாத அஜித்

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலுமே முடிவெடுக்கும் பதவியில் இருக்கிறார் விஷால். அஜித், நடிகர் சங்கத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நடிகர் சங்கத் தேர்தல், கட்டிடம் கட்ட பூஜை என எதிலுமே பங்கேற்பதில்லை. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.

பழிவாங்குகிறாரா விஷால்?

பழிவாங்குகிறாரா விஷால்?

இதனால் அவரைப் பழிவாங்கத்தான் விஷால் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். விஷால் வேண்டுமென்றே அஜித்துக்கு சிக்கல் ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறார்கள் சினிமாத்துறையில் இருக்கும் சிலர். உண்மை என்னவோ விஷாலுக்குத்தான் வெளிச்சம்.

அஜித்தே வேண்டாம் என்றார்

அஜித்தே வேண்டாம் என்றார்

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங்கிற்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விலக்கு கேட்டதாகவும், அஜித் தயாரிப்பாளர்களிடம் பேசி விலக்கு அளிக்குமாறு கேட்க வேண்டாம் எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith's 'Viswasam' shooting was to begin in Hyderabad Ramoji Rao Film City on March 23rd. Vishal has ordered that the shooting will not be held on or after 23rd of this month. Vishal's action is against Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X