»   »  விஷால் அண்ண்ண்ணா, சீக்கிரமா 'சி.ஆம்.' ஆகிடுங்க: அன்பு வெறியர்கள் வேண்டுகோள்

விஷால் அண்ண்ண்ணா, சீக்கிரமா 'சி.ஆம்.' ஆகிடுங்க: அன்பு வெறியர்கள் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்மைல் சேட்டை குழு விஷாலுக்கு எழுதியுள்ள கடிதம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

திருட்டு விசிடியை ஒழிக்க சபதம் எடுத்துள்ளார் நடிகர் விஷால். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.

இந்த சூழலில் விஷாலை கலாய்த்து ஸ்மைல் சேட்டை குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் விஷாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

விஷால்

விஷால்

அன்புள்ள அண்ணனுக்கு உங்கள் அன்பு வெறியர்கள் எழுதுவது, நலம் நலம் அறிய அவா. அண்ணா, எல்லா எலக்ஷன்லயும் ஜெயிக்கிறீங்க வாழ்த்துக்கள்.

படங்கள்

படங்கள்

அண்ணன்னோட எல்லாம் படத்தையும் நாங்கள் பாத்திருக்கிறோம். அதிலயும் சில சீன்ஸ்..சிடி கடையில திருட்டு விசிடியை ஒழிக்க நீங்க சட்டை போட்ட சீன், வெள்ளத்தப்ப நீங்க அழுதுகிட்டே மக்களுக்கு உதவிய சீன்.

சீன்ஸ்

சீன்ஸ்

நடிகர் சங்க எலக்ஷன்ல நீங்க அடிவாங்கின சீன், டெல்லி விவசாயிகள் போராட்டத்துல ஒரு உயிரை மரத்தில் இருந்து காப்பாத்திய சீன், புதிய தலைமுறை படத்துல மயங்கி விழுந்த சீன். எல்லா சீனும் சூப்பர் அண்ணா. செம்மயா நடிக்கிறீங்க. எப்ப படத்துல நடிப்பீங்க.

மதுரைக்காரர்

எங்க அண்ணன் சிட்டி அரவிந்த் மதுரைக்காரர் தான். நீங்க நான் மதுரைக்காரன் தான் என்று கூறியதற்கு பிறகு அவர் மகாராஷ்டிராக்காரர் ஆகிவிட்டார்.

கார்த்தி

கார்த்தி

நீங்க கட்டடம் கட்ட, நீங்களும், கார்த்தியும் சேர்ந்து படம் நடிக்கப் போவதாக சொன்னீங்க. அந்த படத்தை நடிச்சு, அது வெளிவந்து, ஹிட்டாகி, காசு கெடச்சு, பில்டிங் கட்டி, அப்புறம் நீங்க கல்யாணம் பண்ணா ரொம்ப சிரமம் அண்ணா. யோசிச்சுக்கோங்க.

பணம்

பணம்

பெஸ்ட் அதை நடிக்காம அதை எடுக்காம அந்த பணத்தை மிச்சப்படுத்தி அந்த பணத்தை வச்சே பில்டிங் கட்டுங்க. பில்டிங்காவது கட்டின மாதிரி இருக்கும். இல்லன்னா மார்க்கெட் இருக்கிற ஹீரோஸ் அப்பாஸ், ஜித்தன் ரமேஷ், ஜெய் ஆகாஷ், ரிச்சர்ட் இவர்களையாவது வைத்து படம் எடுக்கவும்.

ஆர்யா

ஆர்யா

அண்ணா, உங்க கூட இருக்கிற எல்லாருமே ஆர்யா, ரமணா, விஷ்ணு, விக்ராந்த் எல்லோருமே எப்படி இன்னும் நடிகர் சங்கத்தில் இருக்கிறார்கள். மன்னிக்கவும் ஸ்போர்ட்ஸ் கோட்டா என்றால் சரி.

சி.எம்.

சி.எம்.

அண்ண்ண்ணா, சீக்கிரமா நீங்க சி.எம். ஆகிடுங்க. ஏற்கனவே லாரன்ஸ், ஆதிலாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்காங்க. வேண்டுகோள்- கார்த்தியோட சித்தப்பா விழுப்புரத்துல மினி லாரி ஓட்டுனர் சங்க தலைவராக இருக்கிறாரு. அந்த சங்கத்திற்கு எலக்ஷன் வருது. அவர் இதை நம்பி தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்காரு. அண்ணா, ப்ளீஸ் இந்த ஒரு சங்கத்தை விட்டுடுங்க என ஸ்மைல் சேட்டை குழு கலாய்த்துள்ளது.

English summary
Smile Settai team has written a funny letter to actor Vishal requesting him to become Chief Minister of Tamil Nadu soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil