»   »  பாலாவின் அடுத்த படம் எப்போ? விஷால் தகவல்!

பாலாவின் அடுத்த படம் எப்போ? விஷால் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலாவின் அடுத்த படம் வரும் ஜனவரி 2017-ல் ஆரம்பமாகிறது என்று அதில் நடிக்கும் நாயகர்களில் ஒருவரான விஷால் தெரிவித்துள்ளார்.

தாரை தப்பட்டைக்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமானதாக இல்லை.

Vishal - Bala movie in Jan 2017

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இந்தப் படத்தில் நடிக்கும் நாயகர்களில் இவரும் ஒருவர். இவருடன் அதர்வா, அர்விந்த்சாமி, ராணா டக்குபதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்போது கத்திச் சண்டை படத்தில் நடித்து வரும் விஷால், இந்தப் படம் முடிந்த பிறகு ஒரு ரீமேக் படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு தனது முழு கால்ஷீட்டையும் பாலாவுக்குத் தந்திருக்கிறாராம்.

இந்தப் படம் ஜனவரி 2017-ல் தொடங்குகிறதாம்.

English summary
Vishal's Bala directed new untitled multi starrer will be begins in coming January 2017

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil