»   »  ஒருவழியாக தேர்தலுக்கு முன்னரே வருகிறார் "எம்.ஜி.ஆர்"... விஷால் ஹேப்பி!

ஒருவழியாக தேர்தலுக்கு முன்னரே வருகிறார் "எம்.ஜி.ஆர்"... விஷால் ஹேப்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்து மூன்று வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா வரும் 29ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் சுந்தர்.சி. இயக்கி, விஷால் நாயகனாக நடித்த படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர். விஜய் ஆன்டணி இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


சுருக்கமாக எம்.ஜி.ஆர். எனக் குறிப்பிடப்பட்ட இப்படம், பணப்பிரச்சினை காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கலில் மாட்டியது.


ஆம்பள...

ஆம்பள...

இப்படம் வெளியாகாத போதும், அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து ஆம்பள படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடித்திருந்தார்.


பேச்சுவார்த்தை...

பேச்சுவார்த்தை...

இந்நிலையில், சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று விஷால், நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த மதகஜராஜா படம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.


ரிலீஸ்...

அதன் தொடர்ச்சியாக தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 29ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் விஷால்.


வரலட்சுமி...

வரலட்சுமி...

சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு தமிழில் இரண்டாவது படமாக மதகஜராஜா இருந்திருக்க வேண்டியது. ஆனால், அப்படத்தின் ரிலீஸ் தாமதமானதைத் தொடர்ந்து, அவர் பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டையில் நடித்து தமிழில் திறமையான நடிகைகளுள் ஒருவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Actor Vishal has announced in his Twitter page that 'MGR' will be hitting the screens on April 29, 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil