»   »  பாண்டவர் அணி வென்றதற்கு ‘போர்வாள்’ விஷால் தான் முக்கியக் காரணம்... நாசர் பாராட்டு

பாண்டவர் அணி வென்றதற்கு ‘போர்வாள்’ விஷால் தான் முக்கியக் காரணம்... நாசர் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றதற்கு விஷால் தான் முக்கியக் காரணம் என நடிகரும், நடிகர் சங்கத்தின் புதிய தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலையும் விஞ்சும் வகையில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள், காரசார விவாதங்கள், அதிரடி காட்சிகள் என பரபரப்பை உண்டாக்கியது நடிகர் சங்கத் தேர்தல். இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதின.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று நடிகர் சங்கத் தேர்தல் இனிதே நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த சிறிதுநேரத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தலைவர் நாசர்...

தலைவர் நாசர்...

அதன்படி, தலைவர் பதவிக்கான போட்டியில் நாசர் 1344 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் 1231 வாக்குகள் பெற்றார். நாசர், சரத்குமாரை விட 113 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பொதுச் செயலாளர் விஷால்...

பொதுச் செயலாளர் விஷால்...

இதுபோல பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் 1445 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் ராதாரவி 1138 வாக்குகளும் பெற்றனர். விஷால், ராதாரவியை விட 307 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

மாற்றத்திற்கான நேரம்...

மாற்றத்திற்கான நேரம்...

தேர்தல் வெற்றிக்குப் பின் விஷால் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நாசர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான ஒரு மிகப்பெரிய நிகழ்வு, இந்த நடிகர் சங்கம் தேர்தல். இது யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக நடந்த நிகழ்வு அல்ல. ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தோம், அது நடந்துள்ளது.

பயணம் தொடங்குகிறது...

பயணம் தொடங்குகிறது...

கடந்த நிர்வாகத்தை பற்றி எந்த குறையும் கூற விரும்பவில்லை, இங்கிருந்து எங்களது பயணம் தொடங்குகிறது, எங்களுக்கான பணிகள் அதிகமாக இருக்கிறது.

சரத்குமாரின் வாழ்த்து...

சரத்குமாரின் வாழ்த்து...

தேர்தல் முடிவுக்கு பின்னர் சரத்குமாரை நான் சந்தித்தேன். சரத்குமார் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

ஆதரவு...

ஆதரவு...

உங்களது ஆதரவு வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.

ஒற்றுமையாக செயல்படுவோம்...

ஒற்றுமையாக செயல்படுவோம்...

தேர்தலுக்கு முன்பு ஏதேதோ பேசியிருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை, நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம்.

நன்றி...

நன்றி...

தேர்தல் சிறப்பாக நடத்த உதவிய தமிழக முதல்வருக்கும், காவல் துறைக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

போர்வாள்...

போர்வாள்...

இந்த நிகழ்வுக்கு நான் தலைவராக இருந்தாலும், ஒரு போர்வாளாக இருந்து, நான் சோர்ந்த, பயந்த நேரங்களில் எல்லாம், முயற்சி செய்து பார்ப்போம் என என்னை ஊக்குவித்தது விஷால் தான். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் அவரே' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


English summary
Actor Nasser has praised actor Vishal, that he is the main reason for Nadigar Sangam elections victory.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil