»   »  விஷாலின் கதகளி்யை குடும்பத்துடன் பார்க்கலாமாம்.. "யூ" கொடுத்துட்டாங்க!

விஷாலின் கதகளி்யை குடும்பத்துடன் பார்க்கலாமாம்.. "யூ" கொடுத்துட்டாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் கதகளி படத்திற்கு குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் அளித்திருக்கின்றனர்.

விஷால், கேத்தரின் தெரசா நடிப்பில் பாண்டிராஜ் உருவாக்கியிருக்கும் படம் கதகளி. விஷாலின் பிலிம் பேக்டரி தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.


Vishal' Kathakali Gets U Certificate

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர்.


இந்தத் தகவலை இயக்குநர் பண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். "கதகளி படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்தது, மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் கூறியிருக்கிறார்.யூ சான்றிதழ் கிடைத்ததன் மூலம் இப்படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு வெளியாகும் கதகளி, ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, மிருதன் மற்றும் கெத்து ஆகிய படங்களுடன் மோதுகிறது.


பாயும் புலியால் விஷால் இழந்த இடத்தை கதகளி மீட்டுக் கொடுக்குமா? பார்க்கலாம்.


English summary
Vishal's Kathakali now Gets U Certificate. This Movie will be Released on Pongal Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil