TR உடன் மீட்டிங்கைப் போட்ட விஷால்.. கல்யாண விஷயம் எல்லாம் இல்லை.. விஷயமே வேறப்பா!

சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த கலைஞர்களில் ஒருவர் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளில் வெற்றி கண்ட சகலகலா வல்லவனான டி.ராஜேந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, அவ்வப்போது ஏதாவது படத்தில் நடிப்பது, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டு தனது மூத்த மகன் சிம்பு குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.

இப்படி இருக்கும்போது அவரை நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைப் பார்த்ததும் ரசிகர்கள் பலரும் விஷால் தனது திருமண அழைப்பிதழ் அளிக்கத்தான் டி. ராஜேந்திரனைச் சந்தித்துள்ளார் என்று பலரும் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் சந்திப்பு என்பது வேறு காரணத்திற்காக நடைபெற்றுள்ளது.

Vishal Meet T Rajendaran At Magudam Shooting Spot Reason Is highlight

விஷால் உடன் டி.ஆர்: அதாவது விஷால் தற்போது தனது 35 வது படமான மகுடம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99வது படம் ஆகும். இந்நிலையில் டி.ராஜேந்திரனுடனான சந்திப்பு குறித்து விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து, சந்திப்பு குறித்து எழுதியும் உள்ளார். அவரது பதிவில், " நடிகரும் எனக்கு மிகவும் பிடித்த நபருமான டி. ராஜேந்திரன் அவர்களை இன்று சந்தித்தே.

மகுடம்: எனது அடுத்த படமான மகுடம் படத்திற்காக டி.ஆர். கார்டனில் அமைக்கப்பட்டுள்ள செட்டை அவர் பார்வையிட வந்தபோது அவரைச் சந்தித்தேன். இதற்கு முன்னர் மார்க் ஆண்டனி படத்திற்காகவும் நாங்கள் இங்குதான் செட் அமைத்திருந்தோம். இவரைச் சந்தித்ததை நான் என்னவென்று சொல்வது, அவரை எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சியும் புதுவிதமான எனர்ஜியும் மனதில் ஏற்பட்டு விடுகிறது. அதேபோலத்தான் இந்த சந்திப்பும் என்று அவர் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வேகமாக பரவி வருகிறது.

Vishal Meet T Rajendaran At Magudam Shooting Spot Reason Is highlight

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X