தளபதி 67ல் வில்லன் இல்லை... ஆனால், விரைவில் விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு: விஷால் ஓப்பன் டாக்

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தளபதி 67ல் விஷால்?

தளபதி 67ல் விஷால்?

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67-ல் நடிக்கவுள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இதில், விஷால் தான் மெயின் வில்லனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின.

 விஷாலை - லோகேஷ் மீட்டிங்

விஷாலை - லோகேஷ் மீட்டிங்

இதனிடையே விஷாலை நேரிலும் சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வரும் விஷாலை, ஷூட்டிங் ஸ்பாட் சென்று நேரில் சந்தித்தார் லோகேஷ். விஷாலை, லோகேஷ் நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகவும் செய்தன. இதனால், விஜய் - விஷால் கூட்டணி உறுதி என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதுகுறித்து விஷாலே மனம் திறந்து பேசியுள்ளார். .

 நான் வில்லன் இல்லை

நான் வில்லன் இல்லை

ஏற்கனவே 'தளபதி 67'ல் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிப்பதாக தகவல் வெளியானது. அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள விஷால், தளபதி 67 படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், லோகேஷ் கனகராஜ் தன்னை சந்தித்து தளபதி 67 கதை பற்றி பேசினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கவுள்ளதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தான் விஜய்யுடன் நடிக்க முடியவில்லை" எனக் கூறியுள்ளார்.

 இன்னொரு சம்பவம் இருக்கு

இன்னொரு சம்பவம் இருக்கு

தொடர்ந்து பேசியுள்ள விஷால், "விஜய்யுடன் நடிக்க முடியவில்லை என்றாலும், அவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளேன். இப்ப அதபத்தி நான் பேசினா என் ஃப்ரெண்ட்ஸ் கோவிச்சுப்பாங்க. முதல்ல துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை நான் முடிக்கணும். அதன்பின்னர் நடிகனாக இல்லாமல் வெறும் டைரக்டரா விஜய்யிடம் கதை சொல்ல வேண்டும். அது ஓகே ஆகிவிட்டால் விஜய் நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. 2024ம் ஆண்டு இந்த படத்தின் பணிகளை தொடங்க விருப்பம்" எனவும் விஷால் கூறியுள்ளார். இதனால் தளபதி 67ல் விஷால் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X