»   »  அரசியல் நப்பாசையில் இருக்கும் விஷாலை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்: கலைப்புலி தாணு ஆவேசம்

அரசியல் நப்பாசையில் இருக்கும் விஷாலை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்: கலைப்புலி தாணு ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் கட்சி துவங்கும் நப்பாசையில் விஷால் இருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு விமர்சித்துள்ளார்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்ததை கண்டித்து தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விஷாலை கடுமையாக விமர்சித்தார்.

விஷால் குறித்து அவர் கூறுகையில்,

ஃபிளாப்

ஃபிளாப்

தொடர்ந்து ஃபிளாப் படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் அடித்தவர் விஷால். தயாரிப்பாளர் சங்கத்தை அவர் எப்படி விமர்சிக்கலாம்.

அரசியல்

அரசியல்

அரசியல் கட்சி துவங்கும் நப்பாசையில் உள்ளார் விஷால். அரசியல் ஆசைக்காக பதவிக்கு வரத் துடிக்கிறார். நடிகர் சங்கத்தை அவர் சுடுகாடாக்கிவிட்டார்.

நாசர்

நாசர்

விஷால் மீது நடிகர் சங்க தலைவர் நாசர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாசர் அவர்களே, தயவு செய்து விஷால் மீது நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால் நாங்கள் எடுப்போம். அடுத்த முறை விஷாலால் செயலாளராகவே முடியாது. மக்கள் உன்னை ஓட ஓட விரட்டியடிப்பார்கள்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்களின் வாழ்வில் அடித்துவிட்டு பிறருக்கு உதவி செய்வதாக அறிவிக்கிறார் விஷால். அவர் எப்படி அவர்களுக்கு உதவி செய்வாராம் என்று தாணு தெரிவித்தார்.

English summary
Producer Kalaipuli S. Thanu blasted actor Vishal saying that he is playing games with politics in mind.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil