சிம்பு AAA படத்துல வந்த மாதிரி வந்து நிற்கிறாரே விஷால்.. டிரிபிள் ஆக்‌ஷனில் தெறிக்கும் மகுடம்!

சென்னை: ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷால் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 3 வித்தியாசமான கெட்டப்புகளில் விஷால் இருப்பதை பார்த்து இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல தோல்விப் படங்களை கொடுத்து வந்த புரட்சித் தளபதி விஷாலுக்கு கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

Vishal releases Magudam first look on Vinayagar Chaturthi
Photo Credit:

100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என்றெல்லாம் கொண்டாடிய நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்தார்.

விரைவில் திருமணம்: மார்க் ஆண்டனி படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்த ரத்தினம் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்னதாக சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து உருவான மத கஜ ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில், 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றிப் பெற்றது. இந்நிலையில், நடிகை தன்ஷிகாவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மகுடம் ஃபர்ஸ்ட் லுக்: இன்னும் 2 மாதங்களுக்குள் நடிகர் சங்க கட்டட வேலைகள் அனைத்தும் முடிந்து திறக்கப்படும் என தெரிகிறது. அந்த கட்டடத்தில் தான் விஷால் - தன்ஷிகா திருமணமும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தற்போது மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக நிறைவடைந்து சென்னை திரும்பியதாகவும் பதிவிட்டுள்ளார்.

சிம்புவின் AAA: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 3 வித விதமான கெட்டப்பில் சிம்பு வருவதை போலவே 3 தெறியான லுக்கில் விஷால் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்திலும் பல கெட்டப்புகளில் விஷால் நடித்த நிலையில், அந்த படம் வெற்றிப் பெற்ற நிலையில், அதையே ஃபாலோ செய்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X