»   »  2016 லும் இவங்க சண்டை ஓயாது போலவே!

2016 லும் இவங்க சண்டை ஓயாது போலவே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காண்டம் கேட்குறது ஒண்ணும் தப்பான விஷயம் கிடையாது என்று நடிகை ராதிகா சரத்குமாருக்கு, விஷால் பதிலளித்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான கதகளி படத்தின் டிரெய்லரில் நடிகர் விஷால் கேத்தரினா தெரசாவிடம் காண்டம் கேட்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்று உள்ளது.

இதைப் பார்த்த ராதிகா ''காண்டம் பற்றி ட்ரெய்லரில் வந்தது குற்றம். இதற்காக யாராவது மன்னிப்பு கேட்பார்களா? என் மகன் சிறுவன். அவன் காண்டம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த கதகளி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராதிகாவின் ட்வீட்டிற்கு உங்களின் பதில் என்ன என்று விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்கு நடிகர் விஷால் பதில் கூறும்போது "''பாலியல் கல்வி பற்றி நாம் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒன்றரை நிமிஷ ட்ரெய்லரில் இரண்டு முறை காண்டம் என்ற வார்த்தை வருகிறது.

அதுவும் அந்த கேள்வி மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் பெண்ணிடம் கேட்கப்படுகிறது.காண்டம் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள். காண்டம் என்ற வார்த்தையை பேசுவதே தவறு என சொல்வதே தவறு.

அதைப்பற்றி பேச எனக்கே சிரிப்பு வருகிறது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை.சென்சார் போர்டு பார்த்து அனுமதித்த பிறகே கதகளி ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றாலும் அந்த ட்ரெய்லரை எல்லோரும் பார்க்கலாம்தானே'' என்று விஷால் பதிலளித்துள்ளார்.

இதற்கு ராதிகாவின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

English summary
"There's Nothing Wrong with Asking for a Condom" Vishal is Answered for Radhika Sarathkumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil