»   »  விஷால்-தமன்னாவின் 'கத்திச்சண்டை' தொடங்கியது

விஷால்-தமன்னாவின் 'கத்திச்சண்டை' தொடங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் நடிக்கும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

'படிக்காதவன்','மாப்பிள்ளை', 'அலெக்ஸ்பாண்டியன்', 'சகலகலாவல்லவன்' படங்களை இயக்கிய சுராஜ், அடுத்ததாக விஷால்-தமன்னாவை வைத்து 'கத்திச்சண்டை' படத்தை எடுக்கவுள்ளார்.

இதில் விஷால்-தமன்னாவுடன் இணைந்து சூரி, ஜெகபதி பாபு, வடிவேலு, சம்பத் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் விஷால், வடிவேல், சூரி, பாண்டிராஜ், சுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீண்ட இடைவேளைக்குப் பின் வடிவேலு இப்படத்தில் காமெடியனாக நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே விஷால்- வடிவேலு கூட்டணியில் வெளியான 'திமிரு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் இப்படத்திலும் விஷால்-வடிவேலு காமெடிக்காட்சிகள் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஷாலின் நடிப்பில் 'மருது', 'மதகஜராஜா' படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

மற்றொருபுறம் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடிக்கவும் விஷால் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

English summary
Vishal's Kaththi Sandai Movie Pooja Held Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil