twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    23 கோடி செலவு..ஆனால், வந்தது இவ்வளவு தான்..அதிர்ச்சியில் லத்தி படக்குழு!

    |

    சென்னை : விஷால் நடித்த லத்தி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் வசூலில் டல்லடித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நந்தா ராணா தயாரிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் லத்தி. இப்படத்தில் சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த், வினோத்சாகர், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஷால் சுனைனாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

     வசூலில் டல்லடிக்கும் லத்தி, கனெக்ட்... புலம்பும் விஷால், நயன்: இதுவும் தேவையில்லாத ஆணிதானா? வசூலில் டல்லடிக்கும் லத்தி, கனெக்ட்... புலம்பும் விஷால், நயன்: இதுவும் தேவையில்லாத ஆணிதானா?

    நடிகர் விஷால்

    நடிகர் விஷால்

    நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன்,எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. எனிமி திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட படமாக இருந்தாலும் அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார் இருந்தாலும் படம் சுமார் என்று தான் சொல்லப்பட்டது.

    வீரமே வாகை சூடும்

    வீரமே வாகை சூடும்

    இதையடுத்து, அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி இருந்தார் விஷால். இப்படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்து வந்தார் விஷால். இப்படத்தின் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். ஆனால் இந்த படம் தோல்விப்படமாகிப் போனது.

    கடுமையாக உழைத்தார்

    கடுமையாக உழைத்தார்

    அடுத்தடுத்த தோல்விப்படங்களால் துவண்டு போன விஷால், அடுத்து வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய காட்டாயத்தில் இருந்ததால், லத்தி படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த படத்தின் சண்டைகாட்சியில் பல முறை விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஷால் கான்ஸ்டபிள் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    லத்தி சுமாரான கதை

    லத்தி சுமாரான கதை

    கடமை தவறாத காவலரான விஷால், பாலியல் குற்றவாளி என்ற சந்தேகப்பட்டு ஒரு இளையரை லத்தியால் கடுமையாக அடிக்கிறார். இதனால், விஷால் ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின் டிஐஜி சிபாரிசின் பேரில் மீண்டும் வேலைக்கு சேருகிறார். இதனால், இனி லத்தியை தொடவே மாட்டேன் என்று தீவிரமாக முடிவு எடுக்கிறார். இதையடுத்து, பிரச்சனையில் சிக்கும் விஷால் லத்தியை எடுத்தாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

    பல கோடி நஷ்டம்

    பல கோடி நஷ்டம்

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல்நாளில் தமிழகத்தில் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.23கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 3.40 கோடியை மட்டுமே வசூலித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணா மற்றும் நந்தா ஆகியோர் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள் என்று கூறப்பட்டாலும் விஷால் தான் இந்த படத்திற்கு பணத்தை போட்டுள்ளதால், அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Vishal's Lathi has caused huge losses to the producer. The crew was shocked
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X