»   »  மிஷ்கினுக்காக துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட்டான விஷால்

மிஷ்கினுக்காக துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட்டான விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிஷ்கின் - விஷால் இணையும் புதிய படத்திற்கு துப்பறிவாளன் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடந்தது. இதில் விஷால், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விஷால் தற்போது மருது படத்திலும், மிஷ்கின் சவரக்கத்தி படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இருவரும் தங்களது படங்களை முடித்து விட்டு துப்பறிவாளன் படத்தில் இணையவிருக்கின்றனர்.

சண்டக்கோழி 2 நின்று போனதால் அப்படத்திற்கான கால்ஷீட்களை தூக்கி துப்பறிவாளன் படத்திற்கு விஷால் கொடுத்து விட்டாராம்.

துப்பறிவாளன் என்று பெயர் வைத்திருப்பதால் விஷால் இப்படத்தில் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் வகை திரைப்படமாக துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் உருவாக்கப் போவதாக கூறுகின்றனர்.

விஷால் தனது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கான பிற நடிக, நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படம் குறித்து மேலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துப்பறிவாளன் விஷாலின் 21 வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vishal Tweeted "Startd my nxt film wit Dir mysskin today wit a formal Pooja under my home prod VffVishal. Exciting film.exciting genre.lookin fwd.god bless".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil