»   »  விஷாலின் பாயும் புலி ரசிகர்களின் நெஞ்சங்களில் பாய்ந்ததா...

விஷாலின் பாயும் புலி ரசிகர்களின் நெஞ்சங்களில் பாய்ந்ததா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் பாயும் புலி திரைப்படம் நன்றாக இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக படத்தின் ஆக்க்ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் தங்களை மிகவும் கவர்ந்து விட்டது என்று சமூக வலைதளங்களில் படத்தைப் பாராட்டி இருக்கின்றனர் ரசிகர்கள்.


பல்வேறு பிரச்சினைகளை சமாளித்து இன்று வெளியாகியிருக்கும் பாயும்புலி திரைப்படம் பாக்ஸ் ஆபிசிலும் பட்டையைக் கிளப்பும் என்று தியேட்டர் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றன.


பாண்டிய நாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் சுசீந்திரன் - விஷால் கூட்டணியில் அன்லிமிடெட் ஆக்க்ஷன் படமாக வெளிவந்திருக்கும் பாயும் புலி ரசிகர்களின் நெஞ்சங்களில் பாய்ந்ததா என்று பார்க்கலாம்.


பாயும் புலி கதை

பாயும் புலி கதை

மதுரை பக்கத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து அப்பாவி மக்களிடம் பணத்தைப் பறிக்கிறது ஒரு கும்பல், அதுவும் பெரிய பணக்காரர்களாகப் பார்த்து பணத்தைப் பறிக்கின்றது அந்தக் கும்பல். பணம் கொடுக்காதவர்களை கொலை செய்து பாலத்திற்கு அடியில் போடும் அந்தக் கும்பலை திட்டமிட்டு பிடிக்கும் ஒரு அதிகாரியை நடுரோட்டில் வைத்துக் கொல்கிறார்கள்.


இந்நிலையில் அந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக வரும் விஷால் இவர்களை கண்டுகொள்ளாமல் காஜலுடன் டூயட் பாடித் திரிகிறார், திடீரென்று ஒரு நாள் அந்தக் கும்பலை அழித்து கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.


இந்நிலையில் விஷால் களையெடுத்தது கும்பல் தலைவனை அல்ல என்று தெரிய வர, விஷால் பாயும் புலியாக மாறி அவர்களை அழித்தாரா? இல்லையா என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.விஷால்

விஷால்

ஆறடி உயரம், கம்பீரமான தோற்றம் என போலிஸுக்கே உண்டான மிடுக்குடன் விஷால் முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். சத்யம் படத்தில் ஏற்பட்ட சறுக்கலை பாயும் புலியில் சரி செய்திருக்கிறார் விஷால்.குறிப்பாக காஜலின் அப்பாவை பின் தொடர்ந்து அந்த கும்பலை விஷால் துரத்தும் காட்சி நம்மை சீட்டின் நுனிக்கே வரவைக்கின்றது. விஷால் பட்ட பாட்டிற்கு பாயும்புலி தகுந்த பலனைக் கொடுத்திருக்கிறது.


சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

படத்தின் 2 வது ஹீரோ சமுத்திரக்கனி தான் குறிப்பாக படத்தின் 2ம் பாதி முழுவதுமே சமுத்திரக்கனியை ஒட்டியே நகர்கிறது. விஷாலின் அண்ணனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு பாயும்புலி மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

பாயும்புலியில் காஜலுக்கு சுத்தமாக வேலையே இல்லை எண்ணிப் பத்து காட்சிகள் மட்டுமே வந்து செல்கிறார். காஜலை இவ்வளவு குறைவான காட்சிகளில் பயன்படுத்தியது ஏன் என்று தெரியவில்லை?இதற்கு இயக்குநர் தான் பதில் சொல்ல வேண்டும்.


சுசீந்திரன்

சுசீந்திரன்

ஹீரோவுக்காக கதை சொல்லாமல் கதைக்காக ஹீரோவை பயன்படுத்தும் ஒரு சில இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். வழக்கம் போல பாயும் புலியிலும் ஒரு இயக்குனராக ஸ்கோர் செய்திருக்கிறார் சுசீந்திரன். முதல் பாதியில் சற்றே சொதப்பி இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதை சரிக்கட்டி இயக்குனராக நிமிர்ந்திருக்கிறார் சுசீந்திரன்.


வேல்ராஜ்

வேல்ராஜ்

பாயும்புலியின் ஒளிப்பதிவு வாவ் சொல்ல வைக்கிறது குறிப்பாக அந்த சேஸிங் காட்சிகளை இருட்டிலும் துல்லியமாகக் காண்பித்து இருக்கிறார் வேல்ராஜ்.


இமான்

இமான்

"சிலுக்கு மரமே" பாடலைத் தவிர வேறு எந்தப் பாடலும் நம்மைக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் மனிதர்.


மொத்தத்தில் முதல் பாதியில் சொதப்பிய புலி, இரண்டாம் பாதியில் பாய்ந்து பாயும் புலியாக மாறியிருக்கிறது...English summary
Vishal Krishna and Kajal Aggarwal starrer "Paayum Puli" has opened to fairly positive reviews from the audience and critics. The film is written and directed by Suseenthiran.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil