»   »  விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கும் விஷால்?

விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கும் விஷால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி மற்றும் ஜுங்கா படக்குழு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக பட வேலைகள் எதுவும் நடக்கவில்லை. புதுப்படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை.

இதற்கிடையே விஜய் சேதுபதியின் ஜுங்கா படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துள்ளது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா சைகல் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜுங்கா. படப்பிடிப்பு தற்போது போர்ச்சுக்கலில் நடந்து கொண்டிருக்கிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

சினிமா ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும்போது தடையை மீறி விஜய் சேதுபதி ஜுங்கா படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம்

திட்டம்

ஸ்டிரைக் குறித்து அறிவிப்பு வெளியிடும் முன்பே வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டோம். விசா வேலைகள் முடிந்து படப்பிடிப்பை நடத்த தேவையான கட்டணத்தையும் கட்டிவிட்டோம் என்கிறது படக்குழு.

தயாரிப்பு

தயாரிப்பு

அனைத்து கட்டணமும் செலுத்திவிட்டதால் பணம் வீணாகப் போகக் கூடாது என்று படப்பிடிப்பை நடத்துவதாக ஜுங்கா படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களின் விளக்கத்தை ஏற்க சிலர் தயாராக இல்லை. படக்குழுவினரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

English summary
TFPC has decided to investigate Junga team about conducting shooting abroad amidst cinema strike going on in Tamil Film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X