»   »  வெள்ள நிவாரண பணியில் விஷாலுடன் கை கோர்த்த வரலட்சுமி.

வெள்ள நிவாரண பணியில் விஷாலுடன் கை கோர்த்த வரலட்சுமி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள நிவாரணப் பணியில் விஷாலுடன் இணைந்து நடிகை வரலட்சுமி களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். சரத்குமார் மகள் வரலட்சுமியும் நடிகர் விஷாலும் பள்ளி பருவத்திலேயே நண்பர்களாக பழகி வந்தவர்கள்.

விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வந்ததாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தன. ஆனால் நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட கசப்புணர்வால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக விஷால் வெள்ள நிவாரண பணிகளில் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். அவருக்கு துணையாக வரலட்சுமியும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இணைத்து வைத்த வெள்ளம்

இணைத்து வைத்த வெள்ளம்

பெருமழையாலும், வெள்ளத்தாலும் எற்பட்ட பேரழிவும் ஜாதி மதங்களை மறக்கச் செய்துள்ளது. அதுபோலத்தான் விஷால், வரலட்சுமி இடையே ஏற்பட்ட கசப்புணர்வை மறக்கச் செய்து விட்டதாகவே கூறப்படுகிறது. வெள்ள நிவாரண பணியில் ஆர்யா, கார்த்தி, விஷால் குழுவினர் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

விஷாலுடன் இணைந்த வரலட்சுமி

விஷாலுடன் இணைந்த வரலட்சுமி

தற்போது நடிகை வரலட்சுமி இரண்டு வாரங்களாக நடிகர் விஷாலுடன் சேர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும், வரலட்சுமி சென்னை வெள்ளத்தில் ஹீரோயிசம் காட்டிய நிஜ ஹிரோக்கள் என தன்னுடன் இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்ட நடிகர்களை புகழ்ந்துள்ளார்.

50க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள்

50க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள்

சித்தார்த் தொடங்கி, மயில்சாமி, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விதார்த், பார்த்திபன், சேரன், மோகன், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், சசிகுமார், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகை குஷ்பு, ஆர்யா, கோவை சரளா, வரலட்சுமி, ஹன்சிகா, ஷாலினி அஜித், இயக்குநர் இரா. சரவணன் இப்படி அடுக்கடுக்காகத் திரைப் பட்டாளங்கள் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரண பணிகளை செய்தனர்.

மக்களின் நடிகர்கள்

மக்களின் நடிகர்கள்

முதல்வர் நிவாரண நிதிக்குக் காசோலை ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டால் தானும் பங்கெடுத்திருக்கிறோம் என்பது பதிவாகிவிடும் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி வேலை பார்த்த நடிகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறது, இந்த மழை. தனக்காக கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு தங்களின் உண்மையான அன்பை உணர்த்தியிருக்கிறார்கள் திரை நட்சத்திரங்கள்

English summary
Vishal and Varalakshmi have joined hands to pull Chennai and the rest of Tamil Nadu out of one of its murkiest times. They not only contribute financially, but also physically by involving themselves in rescue and relief measures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil