என்னிடம் கட்டா குஸ்தி படத்தை போட்டு காட்ட விஷ்ணுவிற்குதைரியம் இருந்தது...உதயநிதி வெளிப்படையான பேச்சு
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் செல்லா இயக்கியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. விஷ்ணு மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழில் கட்டா குஸ்தி என்றும் தெலுங்கில் மட்டி குஸ்தி என்றும் இரு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் தமிழ் விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல தகவல்களை கூறியிருக்கிறார்.

கட்டா குஸ்தி
நடிகர் அஜித் நடித்திருந்த ஆழ்வார் திரைப்படத்தை இயக்கிய செல்லா அய்யாவு அதன் பின்னர் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கியிருந்தார். விஷ்ணு தயாரித்து உதயநிதி வெளியிட்ட அந்தப் படம் மிகப் பெரிய லாபத்தை அவர்களுக்கு பெற்றுத் தந்தது. இப்போது அதே மூவர் கூட்டணியில் வெளிவரப் போகும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி.

ஒரே நேரத்தில் அறிமுகம்
தானும் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒரே சமயத்தில்தான் திரைத்துறைக்கு வந்தோம். பின்னர் விஷ்ணு நடித்த நீர்ப்பறவை திரைப்படத்தை தயாரித்தேன். நடிப்பை பொறுத்தவரை விஷ்ணு எனக்கு சீனியர், சமீப காலமாக தான் விநியோகிக்கும் திரைப்படங்களை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசிவிடுகிறேன். அதனால் இப்போது குறைவாகவே பேச விரும்புகிறேன் என உதயநிதி பேசியுள்ளார். சமீபத்தில் ஆர்யா நடித்திருந்த கேப்டன் படத்தை வெளிப்படையாகவே அவர் கலாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர் விநியோகம்
பொதுவாக நடிகர் விஷ்ணு தேர்வு செய்யும் படங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். அவருடைய நீர்ப்பறவை திரைப்படத்தை தயாரித்திருந்த உதயநிதி அதன் பின்னர் விஷ்ணு நடிப்பில் வெளிவந்த சிலுக்குவார் பட்டி சிங்கம், எஃப்.ஐ.ஆர் போன்ற திரைப்படங்களையும் விநியோகம் செய்தார். இந்த ஆண்டின் முதல் வெற்றி படம் எஃப்.ஐ.ஆர் அந்த வரிசையில் கட்டா குஸ்தி திரைப்படமும் இந்த ஆண்டு விஷ்ணு விஷாலிற்கு வெற்றி படமாக அமையும். நான் அந்தத் திரைப்படத்தை பார்த்து விட்டேன் என உதயநிதி கூறியுள்ளார்..

தைரியம்
சினிமா, அரசியல் என்று தொடர் பணிகளில் இருப்பதால் நிறைய படங்களை பார்க்க முடிவதில்லை. பல சமயம் தயாரிப்பாளரும் இயக்குநரும் படத்தை ரிலீசிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் போட்டு காண்பிப்பார்கள். காரணம் முன்னதாகவே காட்டிவிட்டால் நான் சில திருத்தங்களை சொல்வேன் என்று அதனை தவிர்ப்பதற்காகவே இறுதி நேரத்தில் காண்பிப்பார்கள். ஆனால் விஷ்ணு தைரியமாக எனக்கு படத்தை இப்போதே போட்டுக் காட்டிவிட்டார். கண்டிப்பாக கட்டா குஸ்தி வெற்றியடையும் என உதயநிதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











