Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மைக் மோகன் எப்படி மைக் டைசன் ஆனான்.. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி போடும் கட்டா குஸ்தி பாட்டு!
சென்னை: இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி உள்ள கட்டா குஸ்தி படத்தின் அட்டகாசமான 'மைக் டைசன்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான எஃப்ஐஆர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்ததாக மோகன்தாஸ் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்டா குஸ்தி திரைப்படம் பக்காவாக ரெடியாகி வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற "மைக் மோகன் நைட்டோட நைட்டா மைக் டைசன் ஆகப் பார்த்தான்" என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

வெயிட்டு காட்டும் விஷ்ணு விஷால்
ராட்சசன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் முன்னணி ஹீரோவாக மாறுவார் என எதிர்பார்த்த நிலையில், விவாகரத்து, குடி போதை என சிக்கலில் சிக்கி 2 ஆண்டுகள் வீணடித்து விட்டார். பின்னர், உடல் பயிற்சி, ஜுவாலா கட்டாவுடன் திருமணம் என கம்பேக் கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு எஃப்ஐஆர் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. மோகன்தாஸ், கட்டா குஸ்தி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என சும்மா வெயிட்டு காட்டி வருகிறார்.

கட்டா குஸ்தி
ரொமான்டிக் ஸ்போர்ட்ஸ் படமாக கட்டா குஸ்தி படத்தை குறைந்த நாட்களிலேயே இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கி உள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். திருமணம் ஆகி விட்டாலே பொண்டாட்டி உடன் குஸ்தி போட்டுத் தான் ஆக வேண்டும் என டிரைலரிலேயே பஞ்ச் வசனங்கள் அனல் பறந்தன.

மைக் டைசன் பாடல்
இந்நிலையில், கட்டா குஸ்தி படத்தின் அட்டகாசமான "மைக் மோகன் நைட்டோட நைட்டா மைக் டைசன் ஆகப் பார்த்தான்" என்கிற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அந்தோணி தாசன் மற்றும் எம்சி விக்கி இணைந்து பாடி உள்ளனர். ஃபன் ரைடாக உள்ள இந்த பாடல் கபடி வீரர் எப்படி கட்டா குஸ்தி வீரராக மாறுகிறார் என்பதற்கான பாடலாக உருவாகி உள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி ராக்ஸ்
கார்கி, பொன்னியின் செல்வன், அம்மு, குமாரி, கட்டா குஸ்தி என ஏகப்பட்ட படங்களில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், மலையாளம் என இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களில் அசத்தி வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் பாய் கட் எல்லாம் செய்து கொண்டு அதிரடியான கேரளத்து பெண்ணாகவே நடித்திருக்கிறார். வரும் டிசம்பர் 2ம் தேதி கட்டா குஸ்தி திரைப்படம் வெளியாகிறது.