Don't Miss!
- News
17 உனக்கு, 33 எனக்கு.. சிறுவனுடன் பெண் ஓட்டம்.. கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்காம்.. பேர் "மகாலட்சுமி"
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Automobiles
இன்டர்சிட்டி பயணங்களுக்காக விரைவில் அறிமுகமாகிறது வந்தே மெட்ரோ! இது வந்தே பாரத்தின் மினி வெர்ஷனாக்கும்!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி செம ரகளை.. தியேட்டரே சிரிக்குது.. கட்டா குஸ்தி எப்படி?
சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம் செம காமெடியாக தியேட்டரில் ரசிகர்களை சிரிக்க வைத்து வருவதாக படத்தை பார்த்த பலரும் ட்விட்டரில் விமர்சனம் போட்டு வருகின்றனர்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த கட்டா குஸ்தி திரைப்படம் ஃபன் ரோலர் கோஸ்டர் என்றும் நடிகர்கள் எல்லாமே பட்டையை கிளப்பி உள்ளனர் என்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
காமெடி காட்சிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பக்காவாக ஒர்க்கவுட் ஆகி உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..
விஜய் ரசிகர்களை சந்தித்ததற்கு இதுதான் காரணம்? உண்மையை புட்டு புட்டு வைத்த எஸ்.ஏ.சி!

மிஸ் பண்ணிடாதீங்க
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தேவையான அனைத்து கலவைகளும் இந்த படத்தில் உள்ளது என்றும், செம காமெடி படம் கட்டா குஸ்தி, கண்டிப்பாக தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க, இந்த வாரம் குடும்பத்தோட நிச்சயம் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என இந்த ரசிகர் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ஆடை இயக்குநர் பாராட்டு
மேயாத மான், ஆடை, குலு குலு படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் கட்டா குஸ்தி திரைப்படம் ரொம்ப சூப்பரா இருக்கு. சிரித்து முடியல.. ஐஸ்வர்யா லக்ஷ்மி மரண மாஸ் பண்ணியிருக்காங்க இந்த படத்துல.. விஷ்ணு விஷால் நடிப்பு பிரமாதம் என தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கிலும் ஹிட்
ரவிதேஜா மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம் தெலுங்கில் மட்டி குஸ்தி எனும் டைட்டிலில் இன்று வெளியாகி உள்ளது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது என்கின்றனர். லவ் டுடே படத்திற்கு பிறகு ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து தியேட்டரில் விழுந்து விழுந்து சிரித்து வருவதாக ட்வீட்கள் டிரெண்டாகி வருகின்றன.

ஃபேமிலியோ போய் என்ஜாய் பண்ணலாம்
கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் போன்ற கதை தான் கட்டா குஸ்தி படத்தின் கதை. கண்டிப்பாக ஃபேமிலியோட போய் என்ஜாய் பண்ணலாம். கருணாஸ், ரெட்டின் கிங்ஸ்லி, காளி வெங்கட் என அனைவரது காமெடி டைமிங்கும் பக்காவாக இந்த படத்தில் வொர்க்கவுட் ஆகி உள்ளது என இந்த ரசிகரும் படத்தை பாராட்டி உள்ளார்.