Don't Miss!
- News
பாஜக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பதில் கொடுக்கப்படும்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை!
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய கட்டா குஸ்தி... விஷ்ணு விஷாலுக்கு அடிச்ச மெகா ஜாக்பாட்?
சென்னை: விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார்.
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியான கட்டா குஸ்தி படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி செம ரகளை.. தியேட்டரே சிரிக்குது.. கட்டா குஸ்தி எப்படி?

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி
சென்ற வாரம் பாக்ஸ் ஆபிஸில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படமும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி-யும் மோதின. இதில் விஜய் சேதுபதிக்கு தான் மாஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, விஷ்ணு விஷால் சத்தமே இல்லாமல் சக்சஸ் கொடுத்துள்ளார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள 'கட்டா குஸ்தி' படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டா குஸ்தி வெற்றி சந்திப்பு
செல்ல அய்யாவு இயக்கியுள்ள கட்டா குஸ்தி, காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டு மாப்பிள்ளை விஷ்ணு விஷாலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கும் திருமணம் நடக்க, அதன் பின்னணியில் காமெடியாக கதை நகர்கிறது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவருமே அடிதடிக்கு பெயர் போனவர்கள் என்பது தான் இந்தப் படத்தின் காமெடியில் இருக்கும் சுவாரஸ்யமே. இந்நிலையில், கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஒன்பது படங்களில் விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ளதோடு, அவரே இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு நன்றி சொன்ன விஷ்ணு விஷால், "தனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது படங்கள் கைநழுவிச் சென்றன. ஆனால் இப்போது கட்டா குஸ்தியின் வெற்றியால் ஒன்பது படங்களில் கமிட் ஆகியுள்ளேன். விஷ்ணு விஷால் என்ற நடிகனை ஆதரிக்கவே, நான் தயாரிப்பாளராகவும் மாறினேன். நான் தயாரித்த எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. அடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் கண்டிப்பாக வெற்றியடையும், அதற்காக உழைத்துக் கொண்டிருப்பேன்" என்றார்.

பாக்ஸ் ஆபிஸ் குறித்து விஷ்ணு விஷால்
தொடர்ந்து பேசிய விஷ்ணு விஷால் "கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அனைத்து வகையான வியாபாரத்திலும் கட்டா குஸ்தி எனக்கு சக்சஸ் கொடுத்துள்ளது, இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என" நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி, "இந்த வருடம் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் எனக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன. இந்த பாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது அது உண்மையில்லை என தெரிந்துவிட்டது" என்றுள்ளார்.

விஷ்ணு விஷாலின் நம்பிக்கை
கட்டா குஸ்தி ரிலீஸுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த விஷ்ணு விஷால், நான் கிரிக்கெட்டிலும் தோற்றுவிட்டேன், சினிமாவிலும் தோல்வியடைந்துவிட்டேன் என மனமுடைந்து பேசியிருந்தார். அவரின் இந்த வருத்தத்துக்கு இப்போது கட்டா குஸ்தி படத்தின் வெற்றி மருந்தாக அமைந்துள்ளது. மேலும், தொடர்ந்து லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். அதேபோல், தனுஷ் இயக்கும் படத்திலும் விஷ்ணு விஷாலுக்கு முக்கியமான கேரக்டர் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து முக்கியமான கூட்டணிகளில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.