»   »  விஷ்ணு விஷால் - நிக்கி கல்ராணியின் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'

விஷ்ணு விஷால் - நிக்கி கல்ராணியின் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் எழிலின் இயக்கத்தில் விஷ்ணு விஷால்- நிக்கி கல்ராணி நடித்து வரும் புதிய படத்திற்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

விஜய்க்கு மாபெரும் ஹிட் கொடுத்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எழில்.

Vishnu Vishal's Next Film Title Velainu Vandhutta Vellaikaaran

மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை போன்ற படங்களின் மூலம் நகைச்சுவையில் கவனம் செலுத்தி வரும் எழில் தற்போது தனது அடுத்த படத்திற்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

டார்லிங் படத்தில் பேயாக மிரட்டிய நிக்கி கல்ராணி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம். சமீபத்தில் டூப் போடாமல் ஆக்ஷன் செய்யப் போய் கைவிரலை உடைத்துக் கொண்டிருக்கிறார் நிக்கி.

விஷ்ணு விஷால் - நிக்கி கல்ராணி நடித்து வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அநேகமாக அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விஷ்ணு தற்போது வீர தீர சூரன், வீரா போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'வி' செண்டிமெண்ட் விஷ்ணு விஷாலிற்கு கைகொடுக்குமா?

English summary
Vishnu Vishal - Nikki Galrani Starring new movie now has been titled Velainu Vandhutta Vellaikaaran, Directed by Ezhil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil