»   »  விவேகம்: மாயாஜாலில் முதல் நாளே 13,000 டிக்கெட்டுகள் விற்பனை#Vivegam

விவேகம்: மாயாஜாலில் முதல் நாளே 13,000 டிக்கெட்டுகள் விற்பனை#Vivegam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள மாயாஜால் மல்டிபிளக்ஸில் இன்று மட்டும் விவேகம் படத்திற்கான 13 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள விவேகம் படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.

மாயாஜால்

மாயாஜால்

சென்னையில் உள்ள மாயாஜால் மல்டிபிளக்ஸில் விவேகம் டிக்கெட்டுகள் படுவேகமாக விற்றுள்ளன. இதனால் தியேட்டர் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் மகிழ்ச்சியில் உள்ளார்.

டிக்கெட்டுகள்

டிக்கெட்டுகள்

மாயாஜாலில் நாள் ஒன்றுக்கு 90 காட்சிகள் திரையிட தீர்மானித்துள்ளோம். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் ஏற்கனவே 80 சதவீத டிக்கெட்டுகள் விற்றுவிட்டன என்றார் மீனாட்சி சுந்தரம்.

13,000

13,000

மீதமுள்ள டிக்கெட்டுகளும் விற்றுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல் நாளில் மட்டும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளோம். மாயாஜாலில் மங்காத்தா படம் ரூ. 50 லட்சம் வரை வசூலித்தது. அந்த சாதனையை விவேகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

அஸ்வின்

சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் நாளை பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கிறேன். நானும் நாளை விவேகம் பார்ப்பேன், அஜீத் ரசிகர்களுக்கு பெரிய நாள் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் நேற்று ட்வீட்டியுள்ளார்.

English summary
Mayajaal multiplex in Chennai has sold 13,000 tickets of Ajith starrer Vivegam on day one itself.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil