»   »  சக்க போடு போடு ராஜா... சந்தானத்துடன் இணையும் விவேக்!

சக்க போடு போடு ராஜா... சந்தானத்துடன் இணையும் விவேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக முன்னணி காமெடியனாக இருப்பவர்கள், தங்களுக்கு இணையான காமெடியன்களுடன் நடிக்க யோசிப்பார்கள். ஆனால் விவேக் அப்படி அல்ல. எந்தக் காலத்திலும் அப்படி யோசிப்பவர் கிடையாது. ஈகோ பார்க்காமல் சேர்ந்து நடித்துக் கொடுப்பார்.

கவுண்டமணி, வடிவேலு என இரு பெரும் காமெடியன்களுடனும் இணைந்து பல படங்கள் நடித்துவிட்டார்.

Vivek joins with Santhanam in Sakka Podu Podu Raja

அடுத்து சந்தானத்துடன் கைகோர்க்கிறார். இந்தப் படத்துக்கு சக்கப் போடு போடு ராஜா எனத் தலைப்பிட்டுள்ளனர். சர்வர் சுந்தரம் படத்தில் சந்தானத்தை இயக்கிய சேதுராமன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் மெயின் காமெடியனாக விவேக் ஒப்பந்தம் நடிக்கிறார். விஷயம் தெரிந்ததும், 'சந்தானம் ஹீரோ, விவேக் காமெடியா... ?' என ஆச்சர்யத்துடன் கேட்கிறது கோடம்பாக்கம்.

'நம்ம தொழில் காமெடி நடிப்பு. யார் ஹீரோவா இருந்தா என்ன?' என ஜஸ்ட் லைக் தட் அதைக் கடந்து போகிறார் விவேக்!

English summary
Vivek has signed as comedian in Santhanam's Sakka Podu Podu Raja movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos