»   »  ஐஸ்வர்யா, பச்சன் மருமகள் ஆகியாச்சு: ஆனால் இந்த விவேக், சல்மான் பஞ்சாயத்து மட்டும் ஓயலையே!

ஐஸ்வர்யா, பச்சன் மருமகள் ஆகியாச்சு: ஆனால் இந்த விவேக், சல்மான் பஞ்சாயத்து மட்டும் ஓயலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுடனான மனக்கசப்பு பற்றி பேச விரும்பவில்லை என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும், நடிகர் விவேக் ஓபராய்க்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்து வருகிறது. தனக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான நட்பு தொடர்பாக சல்மான் தன்னை மிரட்டுவதாக விவேக் ஓபராய் கடந்த 2003ம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன் பிறகு விவேக் சல்மானிடம் பல முறை மன்னிப்பு கேட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டது.

சல்மான்

சல்மான்

சல்மான் கான் அண்மையில் மெஹபூப் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் இருந்த கிரேட் கிராண்ட் மஸ்தி படக்குழுவினரை சந்தித்து பேசியுள்ளார்.

விவேக்

விவேக்

கிரேட் கிராண்ட் மஸ்தி படத்தில் விவேக் ஓபராயும் நடித்துக் கொண்டிருக்கிறார். சல்மான் வந்த செய்தி அறிந்த அவர் நைசாக அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.

மனக்கசப்பு

மனக்கசப்பு

பரம எதிரிகளாக இருந்த சல்மானும், ஷாருக்கானுமே பிரச்சனையை மறந்து கட்டிப்பிடித்து நண்பர்களாகிவிட்டனர். நீங்கள் ஏன் இப்படி என்று செய்தியாளர்கள் விவேக்கிடம் கேட்டதற்கு அவர் சிரித்து மழுப்பிவிட்டார்.

பிரச்சனை

பிரச்சனை

எனக்கும், சல்மான் கானுக்கும் இடையே 2003ம் ஆண்டில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது என்ன நடந்தது என்று பலருக்கு மறந்துவிட்டது. தற்போது 2015ம் ஆண்டில் உள்ளோம் என்றார் விவேக்.

English summary
Bollywood actor Vivek Oberoi doesn't want to comment about the cold war between him and Salman Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil