»   »  'கயல்' சந்திரனை மணந்து திருமதியானார் விஜே அஞ்சனா

'கயல்' சந்திரனை மணந்து திருமதியானார் விஜே அஞ்சனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா-சந்திரன் திருமணம் நேற்று இனிதே நடந்து முடிந்தது.

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா, கயல் நாயகன் சந்திரன் இருவரும் ஒரு விருது விழாவில் சந்தித்து காதலிக்க ஆரம்பித்தனர்.

இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ள கடந்த நவம்பர் 29 ம் தேதி சந்திரன்-அஞ்சனா நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து சந்திரன்-அஞ்சனா இருவரும் நேற்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கோவிலில் எளிமையாக நடைபெற்றது.

இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட இருவரும்,சென்னையில் தங்களது திருமண வரவேற்பை விரைவில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

முடிவில் சந்திரன் உண்மையான கயலைக் கண்டுபிடித்து விட்டார். வாழ்த்துக்கள் சந்திரன்-அஞ்சனா!

English summary
VJ Anjana-Kayal Chandran Wedding Yesterday Held in Kumbakonam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos