Just In
- 4 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
- 13 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 20 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 26 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Don't Miss!
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்படி என்ன அவசரம் முல்லை.. விஜே சித்துவின் திடீர் தற்கொலையால் கதறி அழும் ரசிகர்கள் #RIpmullai
சென்னை: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என பிரபலமாக அறியப்பட்டு வரும் விஜே சித்து என்கிற சித்ரா திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#RIpmullai, #RIPChitra என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அதிர்ச்சியையும் பதிவிட்டு வருகின்றனர்.
ராத்திரியில் நடந்தது என்ன.. கதறும் தாய்.. அதிர வைத்த சித்து மரணம்.. போனைக் கைப்பற்றிய போலீஸ்!
அடுத்த மாதம் திருமணம் ஆகவிருந்த நிலையில், இப்படி செஞ்சிட்டாரே என்றும், அப்படி என்ன அவசரம் முல்லை என்றும் ரசிகர்கள் அழுது புலம்பி வருகின்றனர்.

நொடிக்கு நொடி அதிரடி
கல்லூரி படிப்பை முடித்த பிறகு மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் விஜே சித்ரா. நொடிக்கு நொடி அதிரடி விளையாட்டை விஜே சித்ரா தொகுத்து வழங்குகிறார் என்பதற்காகவே ஏகப்பட்ட பேர் அந்த தொலைக்காட்சியையும் அந்த நிகழ்ச்சியையும் கண்டு ரசிக்க ஆரம்பித்தனர். விஜே சித்ராவின் ரசிகர்கள் அந்த வீடியோவை தற்போது வைரலாக ஷேர் செய்து தங்களின் சோகத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

வெரி பேட்
வெரி பேட் டே என்றும் வெரி பேட் நியூஸ் என்றும் பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், தன்னுடைய ஃபேவரைட் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியவில்லை என பதிவிட்டு #RIPChitra #RIPMULLAI #WEMISSYOUMULLAI என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளார்.

அநியாயமா போயிடுச்சு
"அழகு புள்ள அநியாயமா போய்டுச்சு", ரொம்ப மிஸ் பண்றோம் முல்லை, முல்லை அக்கா ஏன் இவ்ளோ அவசரம், என்ன ஆச்சுன்னு தெரியலையே என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் விஜே சித்ராவின் தற்கொலையில் சந்தேகத்தையும் அவரது ரசிகர்கள் கிளப்பி விடுகின்றனர்.

விஜய் ரசிகை
விஜே சித்ரா அக்கா உங்க மேரேஜுக்கு விஜய் அண்ணாவை கூட்டிட்டு வருவேன்னு எல்லாம் சொன்னீங்களே அக்கா.. எங்க போச்சு அந்த ஆசை எல்லாம்.. ரொம்பவே ஹார்ட் பிரேக்கிங் என இந்த தளபதி ரசிகர் இதயம் நொறுங்கிப் போய் கிடக்கிறார்.

டிஸ்கவரி சேனல் தவிர
Discovery Channel தவிர மத்த எல்லா சேனல்லயும் வேலை பாத்துருச்சுனு இந்த பொண்ண கலாய்ப்பாங்க, ஆனா ஒவ்வொரு தடவையும் கஷ்டபட்டு அடுத்தடுத்த லெவலுக்கு போய்கிட்டுருந்துச்சு.. சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், இப்படி ஆகிடுச்சே என இந்த நெட்டிசனும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

முல்லையை ரொம்ப மிஸ் பண்ணுவோம்
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் அள்ளி உள்ள விஜே சித்ராவை இனி ரொம்பவே மிஸ் பண்ணுவோம் என விஜய் டிவி ரசிகர்களும், சீரியல் ரசிகர்களும் ஏகப்பட்ட பதிவுகளை சமூக வலைதளங்கள் முழுவதும் பதிவிட்டு வருகின்றனர்.