»   »  மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா இருவரில் விஜய் 60 யாருக்கு?

மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா இருவரில் விஜய் 60 யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் 60 வது படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை.இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜா விஜய் 60 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் காக்கி திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் விஜய் தனது 60 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது கோலிவுட்டினர் மத்தியில் விஜய்யின் 60வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

காக்கி

காக்கி

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் காக்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார்,இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர். காக்கி படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவுக் கட்டத்தை எட்டவிருக்கிறது, இந்தப் படம் முடிந்ததும் விஜய் தனது 60 வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

முருகதாஸ்

முருகதாஸ்

விஜய்யின் 60 வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே கத்தி, துப்பாக்கி என்று இந்தக் கூட்டணி 2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்ததால் 3 வது முறையாக இந்தக் கூட்டணி இணையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் முருகதாஸ் தற்போது ஹிந்தியைத் தொடர்ந்து தெலுங்கு தேசத்திற்கு சென்றுவிட்டார்.
விஜய்யின் 60 வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே கத்தி, துப்பாக்கி என்று இந்தக் கூட்டணி 2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்ததால் 3 வது முறையாக இந்தக் கூட்டணி இணையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் முருகதாஸ் தற்போது ஹிந்தியைத் தொடர்ந்து தெலுங்கு தேசத்திற்கு சென்றுவிட்டார்.

பிரபுதேவா

பிரபுதேவா

அடுத்ததாக இயக்குநர் பிரபுதேவா விஜய் 60 படத்தை இயக்குவார் என்றும் அவர் இதற்காக சென்னை வந்து விஜய்க்கு கதை சொன்னதாகவும் தகவல்கள் கூறின. ஏற்கனவே இருவரும் 2 முறை இணைந்திருக்கின்றனர் வில்லு குறி தவறினாலும், போக்கிரி விஜய்யை தூக்கி விட்டதால் கண்டிப்பாக பிரபுதேவா தான் அடுத்து விஜய்யை இயக்கப் போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன. ஆனால் பிரபுதேவா மற்றும் விஜய் இருவருமே இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா விஜய்யின் 60 வது படத்தை இயக்குகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகின. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் என்றும் கூறினர். விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இயக்குநர் மோகன்ராஜா விஜய் 60 படத்தை இயக்குகிறார் என்று புதியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மோகன் ராஜா

மோகன் ராஜா

தனி ஒருவன் படத்தின் மூலம் தரணியில் அனைவரின் பார்வையையும் தன்மீது திருப்பிய இயக்குனர் மோகன்ராஜா, விஜய் 60 படத்தை இயக்கப் போகிறார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் விஜய்யை சந்தித்த மோகன்ராஜா படத்தின் ஒருவரிக் கதையை கூற அத விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம். எனவே எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பதிலாக மோகன் ராஜாவுடன் விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். இருவரும் வேலாயுதம் படத்தில் ஏற்கனவே இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
Now Vijay Busy in Kakki Shooting he get double role character and he is police officer in this film,Atlee direct this film.Latest Buzz in Kollywood Director Mohan Raja has Describes one liner to vijay, he was Impressed the story but it is not Cleared Vijay team up with Mohan Raja next after Atlee’s film or not.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil