வாடிவாசல் திறக்க காத்திருக்கிறேன்...சூரி போட்ட அசத்தல் போஸ்ட்
சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த கையோடு பாலா இயக்கும் படத்தின் வேலைகளை துவக்கி விட்டார் சூர்யா. இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்திற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், அந்த கேப்பில் பாலா படத்தை முடித்து விட முடிவெடுத்துள்ளார் சூர்யா. சூர்யா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா நடிக்கும் சூர்யா-பாலா படத்தின் ஷுட்டிங்கை ஏப்ரல் மாதம் துவக்கி ஜுலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கேட்டுள்ளாராம் சூர்யா.

எதுக்கு இந்த டெஸ்ட் ஷுட்
ஜுலை மாதம் முதல் வாடிவாசல் படத்தின் வேலைகளை துவக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷுட் நேற்று சென்னை ஈசிஆரில் துவங்கியது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மாடுகளில் இருந்து 12 மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, வாடிவாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கப்பட உள்ளன.

மாடு பிடித்த சூர்யா
இதற்கான வாடிவாசல் போன்று செட் அமைக்கப்பட்டு, அதில் காளைகளை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க உள்ளார்கள். டெஸ்ட் ஷுட் போட்டோக்கள் நேற்று வெளியான நிலையில் இன்று மற்றொரு செட் போட்டோக்களை நடிகர் சூரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் களத்தில் மாடுபிடி வீரர்களுடன் நின்று சூர்யா மாடு பிடிக்கும் போட்டோவும் உள்ளது. பிறகு மாடுபிடி வீரர்களுடன் சூர்யா, சூரி ஆகியோர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.

வாடிவாசல் திறக்க காத்திருக்கிறேன்
இந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சூரி, அண்ணன் வெற்றிமாறன் - அண்ணன் சூர்யா மிரட்டும் வாடிவாசல் ன் டெஸ்ட் ஷுட். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சம்பவம் ஆரம்பமாயிடுச்சு
இதை பார்த்த ரசிகர்கள், வாடிவாசல் சம்பவம் ஆரம்பமாயிடுச்சு. வாடிவாசல் உலகை உலுக்கும். வேற லெவல். வெற்றி ஏன்ப்பா இன்னும் மாஸ்கோடயே இருக்காப்ல. செம ப்ரோ...வாழ்த்துக்கள். அண்ணே நீங்க சூர்யான்னு நினைச்சு பொய்யான ஐடிய டேக் பண்ணீருக்கீங்க. நீங்க மட்டும் தான்ணே தமிழ்ல சொல்றீங்க. வெற்றிமாறன் சார் வாடிவாசல் படத்துல சூர்யாவிற்கு பதில் விஜய்யை நடிக்க வச்சா பெர்ஃபெக்டா இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











