War 2 Box Office - கூலியை இரண்டாவது நாள் வசூலில் முந்தியதா வார் 2?.. நெக் டூ நெக் ஃபைட்தான்!
மும்பை: ரஜினிகாந்த் நடித்த கூலியும், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்த வார் 2 படமும் கடந்த 14ஆம் தேதி ரிலீஸாகின. இரண்டு படங்களில் எந்தப் படம் வசூலில் வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருந்தது. முதல் நாளில் கூலி 65 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்றைய வசூல் விவரம் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, அமீர் கான், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான கூலி மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்திய திரையுலகில் ஏற்படுத்தியிருந்தது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்ற பேச்சுக்களும் கோலிவுட்டில் அடிக்கடி எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிருத்திக் ரோஷனின் வார் 2: சூழல் இப்படி இருக்க ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி, அஷுதோஷ் ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வார் 2 திரைப்படமும் கூலி ரிலீஸான அன்றே ரிலீஸானது. இதற்கு முன்பு வெளியான வார் படத்தின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக பெரிய ரெஸ்பான்ஸை பெறும் என்றே பலராலும் கணிக்கப்பட்டிருந்தது.

எப்படி இருக்கு படம்?: ஜூனியர் என்.டி.ஆரும் இருப்பதால் தெலுங்கு மார்க்கெட்டிலும் இப்படத்துக்கு வேல்யூ கூடியது. அதன் காரணமாக பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் இந்தப் படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ்வாக இருக்கும் என்று கருதப்பட்டிருந்தது. அதுபடியே அந்த இரண்டு ஏரியாக்களிலும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் துளிக்கூட கனெக்ட் ஆகவில்லை. இதற்கு கூலி பரவாயில்லை என்பதுதான் பலரது மைண்ட் வாய்ஸாக இருக்கிறது.
முதல் நாள் வசூல்: விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் பான் இந்தியா ரிலீஸ் என்பதால் வணிக ரீதியாக படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. படம் ரிலீஸான ஆகஸ்ட் 14ஆம் தேதி மட்டும் இப்படம் இந்தியாவில் 52 கோடி ரூபாய் வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறின. கூலி படம் ரிலீஸாகியும் முதல் நாளில் வார் 2 50 கோடி ரூபாயை தொட்டது பெரிய பாசிட்டிவ்தான்.
இரண்டாவது நாள் வசூல்: இந்நிலையில் இரண்டாவது நாள் (ஆகஸ்ட் 15) வசூல் குறித்த தகவலை Sacnilk வலைதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி விடுமுறை நாளான நேற்று இப்படம் மொத்தம் 56.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் 108 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்த வலைதளம் கூறுகிறது. அதே வெப்சைட்டின் இன்னொரு தகவல்படி கூலி திரைப்படம் நேற்று 53.50 கோடி ரூபாய்தான் வசூலித்ததாக கூறுகிறது.
அதேசமயம் இந்தியாவில்தான் கூலியை வார் 2 திரைப்படம் முந்துவதாக தெரிகிறது. ஆனால் உலகம் முழுவதும் கூலி முதல் நாளே 151 கோடி ரூபாயை வசூலித்து கெத்து காட்டியது. வார் 2வை பொறுத்தவரை உலக வசூலில் இருக்கும் இடமே தெரியவில்லை. கண்டிப்பாக கூலி படம் வார் 2வை இந்தியாவிலும் முந்தவிடாது; போகப்போக நிச்சயம் பிக்கப்பாகிவிடும் சூழ்நிலையும் இங்கு நிலவிவருவது நினைவில் கொள்ளத்தக்கது.


Click it and Unblock the Notifications











