»   »  மலேசிய ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டாரா நயன்தாரா? பரபர தகவல்கள்!

மலேசிய ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டாரா நயன்தாரா? பரபர தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலேசியா சென்றிருந்த நயன்தாராவை தடுத்து நிறுத்தி, பாஸ்போர்ட் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்ததாக பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன நடந்தது என்று விசாரிக்கையில், "இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மலேசியா வந்தபோது அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும், அவரது டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்ததால் அவரை மலேசிய விமான நிலைய காவலர்கள் சிறிது நேரம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார்கள். அந்த போட்டோக்கள்தான் இப்போது இணையத்தில் வலம் வருகின்றன.

படத்துக்காகவா?

படத்துக்காகவா?

சமீபத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா ரகசிய ஏஜெண்டாக வருவார். அந்த காட்சியும் மலேசிய விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அந்த போட்டாவாகக் கூட இருக்கலாம்.

முரண்பாடு

முரண்பாடு

ஆனால் அவரின் பாஸ்போர்ட் பெயரும், டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் உயர் அதிகாரியின் சீல் வைக்கவில்லை என்பதால் அவரிடம் விசாரணை நடந்தது. அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக வருகிறது. இதெல்லாம் நயனுக்கு புதியது இல்லை," என்றார்.

உண்மையான பெயர்

உண்மையான பெயர்

நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். ஆனால், படத்துக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றினார்.

இந்நிலையில், மலேசியா சென்ற நயன்தாராவிடம், பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் குறித்து விசாரணை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

குழப்பம்

குழப்பம்

பாஸ்போர்ட்டில், குரியன் நயன்தாரா என்றும், பிறந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றும் இருக்கிறது. ஆனால் நயன்தாராவின் சொந்த ஊர் கேரளா என்பதால் குழப்பம் நீடிக்கிறது.

English summary
The recent reports on Nayanthara's detainsion at Malaysian Airport create buzz in Media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil