»   »  எங்களை பற்றி உலகிற்கே தெரியும், யாரைப் பார்த்து..?: மருமகனுக்கு நடிகர் ரந்திர் பொளேர்

எங்களை பற்றி உலகிற்கே தெரியும், யாரைப் பார்த்து..?: மருமகனுக்கு நடிகர் ரந்திர் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கபூர்கள் யார் என்று உலகிற்கே தெரியும். எங்களுக்கு யார் பணமும் தேவையில்லை என்று நடிகை கரிஷ்மா கபூரின் தந்தையும், நடிகருமான ரந்திர் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் கபூரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் ராஜ் கபூர் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கரிஷ்மாவும், சஞ்சயும் பிரிந்துவிட்டனர். அவர்களின் விவாகரத்து வழக்கை சஞ்சய் திடீர் என்று வாபஸ் வாங்கிவிட்டார்.

காதல்

காதல்

சஞ்சய் வேறு ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அவரின் தாய்க்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை. கரிஷ்மாவும் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

தாக்கு

தாக்கு

கரிஷ்மா படாடோபமாக வாழத் தான் தனது பணத்தின் மீது ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாக சஞ்சய் கபூர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு கரிஷ்மாவின் தந்தையும், நடிருமான ரந்திர் கபூர் பதில் அளித்துள்ளார்.

கபூர்கள்

கபூர்கள்

இந்த உலகத்திற்கே கபூர்கள் யார் என்று நன்கு தெரியும். கடவுள் எங்களுக்கு போதிய சொத்தையும், திறமையையும் அளித்துள்ளார். நாங்கள் திறமையானவர்கள். அதனால் யாருடைய பணத்திற்கும் பின்னால் அதுவும் குறிப்பாக சஞ்சய் கபூரின் பணத்திற்கு பின்னால் செல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என்று ரந்திர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய்

சஞ்சய்

சஞ்சய் தனது கேர்ள்பிரண்ஸ்டுகளை இம்பிரஸ் செய்ய தான் பெரிய பணக்காரர் என்று கூறுகிறார் போன்று. இதை அவர் தனது சுய விளம்பரத்திற்காக செய்கிறார் என்று விளாசியுள்ளார் ரந்திர்.

கரிஷ்மா, கரீனா

கரிஷ்மா, கரீனா

என் மகள்கள் கரிஷ்மா, கரீனா கபூருக்கு நான் பாதுகாப்பாக இருந்து வருகிறேன். என் பேரக்குழந்தைகளை யார் செயலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன். அவர்களின் நலனை நினைத்து தான் கவலையாக உள்ளது என்று ரந்திர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்

குழந்தைகள்

குழந்தைகள் தற்போது கரிஷ்மாவுடன் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சஞ்சய் கடந்த மாதம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Veteran actor Randhir Kapoor told that his actress daughter Karishma Kapoor didn't marry Sanjay for money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil