குளியல் வீடியோ முதல் திருமண சர்ச்சை வரை.. த்ரிஷா சந்தித்த சர்ச்சைகள்.. ஆனாலும் இதுதான் ஹைலைட்ஸ்!

சென்னை: நடிகை த்ரிஷா சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என இணையத்தில் பரவி வதந்திக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். த்ரிஷா சினிமாவில் நுழைந்ததில் இருந்து பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளார். அவை என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை த்ரிஷா. அந்த படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தார். விக்ரமுடன் இவர் நடித்த சாமி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று த்ரிஷாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அதன் பின், தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார்.

Trisha controversy rumors
Photo Credit:

குளியல் வீடியோ: இந்த நேரத்தில் தான், த்ரிஷா ஓட்டல் அறையில் குளித்து கொண்டிருப்பது போன்ற இரண்டரை நிமிட வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2005ம் ஆண்டு கால கட்டத்தில் சோஷியல் மீடியா பெரிய அளவில் வளராததால், அந்த வீடியோ விசியாக சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன. இது குறித்து போலீசார் த்ரிஷாவிடம் விசாரணை நடத்திய போது, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றார்.

திருமண சர்ச்சை: அதன் பின், த்ரிஷாவிற்கு 2015 ஜனவரி 23ம் தேதி, வருண் மணியன் வீட்டில், நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் நெருக்கமானவர்களுடன், அதிக ஆடம்பரம் இல்லாமல் நடந்தது. நிச்சயம் முடிந்த அடுத்தடுத்த மாதங்களிலேயே நின்றுபோனது. த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் எங்கள் திருமணம் நடக்காது என அதிரடியாக அறிவித்திருந்தார். நிச்சயத்தோடு திருமணம் நின்று போனதால், அந்த நேரத்தில் இது பெரிய அளவில் பேசப்பட்டது.

குடித்துவிட்டு ஆட்டம்: அடிக்கடி பார்ட்டிக்களுக்கு செல்லும் த்ரிஷாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஒரு பெரிய நடிகருடன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, ஷூட்டிங் பிரேக்கில் அந்த ஹீரோவும், த்ரிஷாவும் மது குடித்துவிட்டு, கேரவனில் அந்த நடிகருடன் கடுமையான சண்டை போட்டதாக செய்திகள் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அதேபோல, பார்ட்டியில் ஜாலியாக இருப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலாகி, சர்ச்சையில் சிக்கினார் த்ரிஷா.

கூவாத்தூர் சர்ச்சை: கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் த்ரிஷா தான் வேண்டும் என்று கூறி அடம் பிடித்தார், இதற்காக கருணாஸ் ஏற்பட்டின் பெயரில் த்ரிஷாவிற்கு 25 லட்சம் கொடுத்து அழைத்து வரப்பட்டதாகவும், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு பேசி இருந்தார். இது பெரும் புயலை கிளப்பிய நிலையில், அவதூறாக பேசியவர் மீது, த்ரிஷா சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சிங்கப்பெண்: தற்போது த்ரிஷா,சண்டிகரை சேர்ந்த தொழில் அதிபரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இருவரின் குடும்பத்தினருமே பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்ததால், இந்த திருமணத்தை த்ரிஷாவின் குடும்பத்தினர் பேசி முடித்து இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்தன. இந்த திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எனக்காக என் வாழ்க்கையை மக்கள் திட்டமிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. அதே மக்கள் என் தேனிலவையும் திட்டமிடுவார்கள் என காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். பல சர்ச்சைகள் வந்தாலும், அந்த சர்ச்சைகளால் துவண்டு போகாமல் சிங்கப்பெண்ணாக த்ரிஷா அந்த சர்ச்சைகளை தவிடுபொடியாக்கி வருகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X