»   »  அசால்டா 1 மில்லியன் வியூஸ்: பைரவா டீஸரில் உங்களுக்கு பிடித்தது என்ன?

அசால்டா 1 மில்லியன் வியூஸ்: பைரவா டீஸரில் உங்களுக்கு பிடித்தது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா டீஸர் வெளியாகிய சில மணிநேரங்களிலேயே அதை லட்சக் கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் பைரவா படத்தின் டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று இரவு வெளியானது. டீஸரில் விஜய் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் வந்துள்ளார்.


What do you like about Bairavaa teaser?

விளையாடலாமா? தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் அல்லு அதிகமாக இருக்கணும் என பன்ச் வசனம் பேசியுள்ளார். இது தவிர நெருப்புடா ஸ்டைலில் வர்லாம் வர்லாம் வா பைரவா என அருண் காமராஜ் குரலில் பாடல் தெறிக்கிறது.


டீஸர் வெளியான சில மணிநேரங்களிலேயே அதை 15 லட்சத்து 34 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். டீஸரை பார்த்தவர்கள் எல்லாம் விளையாடலாமா என்கிறார்கள்.பைரவா டீஸரில் விஜய்யின் புது கெட்டப், பன்ச், தெறி பாடல் எது உங்களுக்கு எது பிடித்துள்ளது? உங்களின் கருத்துகளை நாகரிகமான முறையில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

English summary
Vijay's Bairavaa teaser has got 15 lakh views within few hours of its release. What do you like about the teaser?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil