»   »  அஜீத்தே சொல்லிட்டாரே: நடிகர் ஜெயராம் ஹேப்பி அண்ணாச்சி

அஜீத்தே சொல்லிட்டாரே: நடிகர் ஜெயராம் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தன்னை விட ஜெயராம் அழகாக இருப்பதாக அஜீத் தெரிவித்துள்ளார்.

ஹீரோக்கள் எவ்வளவு வயாதானாலும் தலைக்கு டை அடித்து கருப்பு முடியுடன் நடிக்கிறார்கள். இந்நிலையில் அஜீத் மங்காத்தா படத்தில் துணிந்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்தார்.

அந்த லுக்கிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

மங்காத்தா

மங்காத்தா

மங்காத்தா படத்தில் இருந்து அஜீத் தனது சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மெயின்டெய்ன் செய்து வருகிறார். அவரை பார்த்து பிற ஹீரோக்களும் அந்த லுக்கிற்கு மாறி வருகிறார்கள்.

ஜெயராம்

ஜெயராம்

அச்சாயன்ஸ் மலையாள படத்தில் ஜெயராம் முதல் முறையாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை முயற்சி செய்தார். அவருக்கு ஷாலினி நல்ல பழக்கம் என்பால் தனது புகைப்படத்தை அவரிடம் கொடுத்து அஜீத்திடம் காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

அஜீத்

அஜீத்

ஜெயராமின் புகைப்படத்தை பார்த்த அஜீத் அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். சேட்டா, இந்த லுக்கில் நீங்கள் தான் என்னை விட சிறப்பாக உள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளார் அஜீத்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தான் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை முயற்சி செய்ததற்கு கிடைத்த முதல் பாராட்டு அஜீத்தின் எஸ்.எம்.எஸ். என்று ஜெயராம் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

English summary
Actor Jayram is happy as Ajith has appreciated his salt and pepper look he sported for the movie Achayans. It is noted that Ajith is known for his salt and pepper look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil