For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  56 வயதிலும் வெறித்தனமாக நடிக்கும் விக்ரம்.. திடீரென உடல்நலக்குறைவு வர என்ன காரணம்?

  |

  சென்னை: பொன்னியின் செல்வன், கோப்ரா என இந்த வயதிலும் பிரம்மாண்ட படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சியான் விக்ரம்.

  Recommended Video

  நடிகர் Vikram-க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! என்ன ஆனது ? *Kollywood | Filmibeat Tamil

  இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

  தீவிர சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் நார்மல் வார்டுக்கு விக்ரம் மாற்றப்பட்டுள்ளார் என்றும் நிம்மதி தரக்கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் உடல் நிலை குறித்த அறிக்கையை த்ருவ் விக்ரம் மற்றும் விக்ரமின் மேனேஜர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

  அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் திரைப்பிரபலங்கள்.. ரசிகர்கள் சோகம்! அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் திரைப்பிரபலங்கள்.. ரசிகர்கள் சோகம்!

  சியான் விக்ரம்

  சியான் விக்ரம்

  1966ம் ஆண்டு ஏப்ரல் 17ல் சென்னையில் ஜான் கென்னடி விக்டராக பிறந்தவர் சினிமாவில் விக்ரமாக அறிமுகமானார். 1990ல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமான விக்ரம் சேது படம் மூலம் சியான் விக்ரமாக மாறுவதற்கு முன்னதாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சேர்த்து 20 படத்துக்கும் மேல் நடித்துள்ளார். ஆனால், அதில் பல படங்கள் தோல்விப் படமாகவும், சில படங்கள் சுமாராக ஓடிய படமாகவே இருந்தன.

  ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி

  ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி

  சேது படத்தில் கல்லூரி மாணவனாக அதகளம் பண்ணும் விக்ரம் கிளைமேக்ஸில் மனநலம் பாதிக்கப்பட்டவராக அப்படியொரு கோலத்தில் பார்த்ததுமே ரசிகர்கள் நெஞ்சடைத்துப் போனார்கள். அதுதான் அந்த படத்தை வெற்றியடைவும் செய்தது. ஜெமினி படத்தில் கண் அருகே கத்தி குத்த வருவது போல காட்சி எடுக்கப்பட்டு இருக்கும். பிதாமகன் படத்திற்காக பல நாட்கள் பல் கூட துலக்காமல் நடித்தார் விக்ரம் என்பார்கள். அந்நியன் படத்திற்காக அவர் போட்ட உழைப்பு போல தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் போடவில்லை என்பார்கள். ஐ படத்தில் தனது உடல் எடையை சிக்ஸ் பேக் வைத்தும் கூன் விழுந்து உடல் முழுக்க கட்டி வந்த முதியவராகவும் நடிக்க பல நாட்கள் சாப்பிடாமலும், சில நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமலும் நடித்துள்ளார் விக்ரம்.

  56 வயதிலும் ஓயாத நடிப்பு

  56 வயதிலும் ஓயாத நடிப்பு

  56 வயதிலும், மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் அடுத்ததாக பா. ரஞ்சித்தின் பிரம்மாண்டமான பீரியட் பிலிம் என பல படங்களில் ஓயாத நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சியான் விக்ரம். மஹான் படத்தில் மகன் த்ருவ் விக்ரமுக்கு சரி நிகராக சண்டைப் போட்டு நடித்து இருப்பார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக போர்க் காட்சிகளிலும், குதிரை ஏற்றத்துடனும் நடித்து அசத்தி உள்ளார். கோப்ரா படத்திற்கு அவர் பல கெட்டப்புகளில் நடித்து இருக்கும் டீசரை பார்த்தே கூஸ்பம்ப்ஸ் ஆனது.

  கடும் காய்ச்சல்

  கடும் காய்ச்சல்

  நடிகர் சியான் விக்ரமுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்படக் காரணமே கடும் காய்ச்சல் தான் என்றும், வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை முடிந்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சார்பட்டா பரம்பரை படத்துக்கு ஆர்யா உடம்பை முரட்டுத் தனமாக மாற்றியது போல பா. ரஞ்சித் படத்துக்கும் ஸ்டெராய்டுகளின் உதவியோடு விக்ரம் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வந்ததன் விளைவு தான் என்றும் சில கருத்துக்கள் கிளம்பி உள்ளன.

  பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு வருவாரா

  பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு வருவாரா

  சியான் விக்ரமின் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், அவர் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவிற்கு செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் திங்கட்கிழமை கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற நிலையில், அதில் கலந்து கொள்வார், அதற்குள் அவரது உடல்நிலை சீராகிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கலைக்காக தனது உடல் பொருள் ஆவியை கொடுத்து நடிக்கும் உன்னதமான ஒரு கலைஞனுக்கு ஒன்றுமே ஆகாது என ரசிகர்கள் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

  English summary
  Heavy risk taken actor of Kollywood Industry Chiyaan Vikram suddenly admitted in Kaveri Hospital news shocks Tamil Cinema Industry and also fans very much.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X