Just In
- 3 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 3 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 3 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 4 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Automobiles
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விண்ணைத்தாண்டி வருவாயா 2 என்ன ஆனது? மறுபடியும் அந்த மேஜிக் நடக்குமா கெளதம் மேனன் சார்!
சென்னை: காதலை கண்களால் சொல்வதும், காதல் வலிகளால் இளைஞர்கள் இதயங்களை கொல்வதும் கெளதம் மேனனுக்கு கை வந்த கலை.
ஆக்ஷன் படங்கள் எடுத்தாலும், அதிலும் வரும் சின்ன லவ் போர்ஷன் காதலர்களின் எனர்ஜி டானிக்காக இருக்கும்.
வேட்டையாடு விளையாடு படத்தில், கமல், கமாலினி முகர்ஜியை பார்த்து சொல்லும் அந்த ஒரு வசனமே இதற்கு உதாரணம்.
விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் வேளையில், அதன் இரண்டாம் பாகம் என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எவ்ளோ லவ் படம் வந்தாலும்... எங்களுக்கு மட்டும் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா புடிக்குது? #10YearsOfVTV

ஜெஸ்ஸி மேஜிக்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இப்போ பார்த்தாலும், புதுப் படமாகவே தோன்றும், சமீபத்தில் வெளியாகும் சில காதல் படங்கள், ஏன் இப்படி மொக்கை செய்றாங்க என்று கூட தோன்றும். அந்த அளவுக்கு, கார்த்தி - ஜெஸ்ஸி மேஜிக் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நிறைந்திருக்கும்.

பிற மொழிகளில்
தமிழில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் விண்ணைத்தாண்டி வருவாயா வெளியான போதே, தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பாலிவுட்டில் எமி ஜாக்சன், பிரதீக் பாபரை வைத்து கெளதம் மேனன் இயக்கி இருந்தார். ஆனால், இந்தியில் படம் ஓடவில்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா 2
கடந்த 2018ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகப் போவதாகவும், அந்த படத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிப்பார் என்றும், 4 நண்பர்களை பற்றிய ஃபீல் குட் மூவியாக அந்த படம் உருவாகும் என்றும், கெளதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால், கடன் பிரச்சனையில், சிக்கிய கெளதம் மேனன் அந்த படம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிடவில்லை.

மீண்டும் நடக்குமா?
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவும், திரிஷாவும், இன்றும் லீடிங் நட்சத்திரங்களாக கோலிவுட்டில் கலக்கி வருகின்றனர். சிம்பு - திரிஷா காம்பினேஷனில் புதிய கதைக்களத்துடன் விண்ணைத்தாண்டி வருவாயா 2 வருமா? என்பதே பல ரசிகர்களின் ஏக்கமாகவும், கோரிக்கையாகும் இருக்கிறது.

ஜோஷ்வா இமை போல் காக்க
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் லேட்டா ரிலீசான எனை நோக்கிப் பாயும் தோட்டா சரியாக போகவில்லை. வருண் நடிப்பில் உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படம், பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் ரிலீஸ் தேதியும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போயுள்ளது.

துருவ நட்சத்திரம் எப்போ?
ஜோஷ்வா இமை போல் காக்க படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படமும் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. கோப்ரா, பொன்னியின் செல்வன் என பிசியாக இருக்கும் விக்ரம், கெளதம் மேனனுக்கு கால்ஷீட் ஒதுக்கினால் தான் அந்த படமும் ரெடியாகும். இந்த பட பிரச்சனைகள் எல்லாம் முடிந்தால், தான் கெளதம் அடுத்த படத்தை தொடங்குவார் என தெரிகிறது.