»   »  திருமணம் நின்றது ஏன்: திரிஷா – வருண்மணியன் பற்றி மனம் திறந்த அம்மா

திருமணம் நின்றது ஏன்: திரிஷா – வருண்மணியன் பற்றி மனம் திறந்த அம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிஷா - வருண்மணியன் திருமணம் நின்று போனது பற்றி ஊடகங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதைப்பற்றி திரிஷாவோ, வருண்மணியனோ எந்த தகவலுமே வெளியிடவில்லை. ஆனாலும் செய்திகள் வெளியாவது மட்டும் நின்றபாடில்லை.

இதற்கிடையே திரிஷாவிற்கு வரிசையாக படங்கள் புக் ஆகிவருகின்றன. இதுபற்றிய செய்திகளும் தினசரி ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் திரிஷாவின் தாயார் உமா தனது மகளின் திருமணம் நின்று போனது குறித்து பிரபல வார இதழ் பேட்டி அளித்துள்ளார் படியுங்களேன்.

மனதுக்கு பட்டதை எழுதுவதா?

மனதுக்கு பட்டதை எழுதுவதா?

திரிஷாவின் கல்யாணம் சம்மந்தமா அவங்க அவங்க மனசுக்கு என்னவெல்லாம் தோணுதோ, அப்படி இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு வர்றாங்க. பத்திரிகையில எல்லாம் திரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்கறது வருணுக்கும், அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்' என்று தங்களுக்கு தோணுறதை எல்லாம் எழுதறாங்க.

நடிப்பது தெரியுமே?

நடிப்பது தெரியுமே?

இதில் துளிகூட அதில் உண்மை இல்லை. திரிஷா சினிமாவுல நடிக்கிறார்னு தெரிஞ்சுதான் பொண்ணு பார்க்க வந்தாங்க. புதுசாவா சினிமாவுல திரிஷா நடிக்கிறார். ஏற்கெனவே ஏகப்பட்ட படத்துல நடிச்சவர்னு தெரிந்துதானே நிச்சயம் செய்தாங்க.

நடிக்க சம்மதம்

நடிக்க சம்மதம்

கல்யாணத்துக்கு அப்புறமும் நடிக்கலாம்னு திரிஷாவை, வருண் என்கரேஜ் செய்து கொண்டு இருந்தார் அதுதான் நிஜம். அதுமட்டுமில்ல, திரிஷா சினிமாவுல நடிக்கறது அவங்க குடும்பத்தோட பெருமையாத்தான் நினைச்சாங்க.

அவங்க சொல்லலையே

அவங்க சொல்லலையே

நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும்கூட நிறைய புதுப்படத்துக்கு த்ரிஷா தேதி கொடுத்து இருக்கிறது வருண் ஃபேமிலிக்கு நல்லாவே தெரியும். கல்யாணத்துக்கு பிறகு திரிஷா நடிக்கக்கூடாதுன்னு வருண் குடும்பத்தார் சொல்லி இருந்தாங்கன்னா நாங்க புதுப்படத்தை கமிட் செய்தே இருக்க மாட்டோம்.

வெளிப்படையா சொல்ல முடியாது

வெளிப்படையா சொல்ல முடியாது

திரிஷா கல்யாணம் நின்னுபோன விஷயத்துல பெரியவங்க பலபேர் சம்மந்தப்பட்டு இருக்காங்க. அதனால் எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியது, பேசறது நாகரீகம் கிடையாது. நாங்க ஏதாவது வாய் திறந்து பேசப்போயி, அதைப்பத்தி வேற மாதிரி திரிச்சு எழுதிடுவாங்க. அந்த பெரியவங்களோட மனசு காயப்படுறதுக்கு நாங்க காரணமா இருக்க விரும்பலை.

பிரிந்து விடுவது பெட்டர்

பிரிந்து விடுவது பெட்டர்

ஒத்துவராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு வாழறது எந்த விதத்துல நியாயம்? சில விஷயங்கள் சரிப்பட்டு வரலைன்னா பிரிந்து விடுவது பெட்டர். அதுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மனக்குழப்பம்தான் வரும்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

எல்லாருக்கும் அவங்க அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதைத் தேடிப் போக வேண்டியதுதான். இப்போ திரிஷாவோட கவனம் எல்லாம் புதுசா தேதி கொடுத்து இருக்குற படங்களின் மேலதான் இருக்கிறது என்று கூறியுள்ளார் திரிஷாவின் அம்மா உமா.

English summary
Trisha's mother has clarified the issue of Trisha's marriage with Varun Manian.
Please Wait while comments are loading...