சும்மா இருந்தவரை சீண்டிவிட்டு.. பீஸ்ட் படத்தோட கதை இதுவா? ஃபர்ஸ்ட் லுக்கில் ஒளிந்துள்ள ரகசியம்!
சென்னை: தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் கான்செப்ட் குறித்த யூகங்கள் எழுந்துள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
நாளை நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது படக்குழு.

கையில் துப்பாக்கியுடன்
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட் பனியன் அணிந்துள்ள நடிகர் விஜய் கையில் துப்பாக்கியுடன் புகை சூழ காணப்படுகிறார்.

என்ன மாதிரியான கதை?
பீஸ்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் மிருகத்தனமான ஆக்ரோஷமான என்பது பொருள். இந்நிலையில் தளபதி 65 படத்திற்கு இப்படி ஒரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் இது நிச்சயம் பழிவாங்கும் ஒரு கதையாக தான் இருக்கும் என தெரிகிறது.

எதிரிகளை பந்தாடுவாரா?
சிலரால் சீண்டி விடப்பட்ட ஹீரோ பீஸ்ட் மோடுக்கு மாறி எதிரிகளை பந்தாடுவாரா என்று யூகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பீஸ்ட் மோடில் உள்ளவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வாரா? மற்றவர்களை காப்பாற்றுவாரா என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.

பொங்கி எழும் ஹீரோக்கள்
தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் அமைதியான ஹீரோக்களை சொரிந்து விடுவார்கள் வில்லன்கள். ஹீரோவின் குடும்பத்தை சீண்டுவது, அதன் மூலம் ஹீரோவின் பொறுமையை சோதித்து பொங்கி எழச் செய்வது போன்ற கதைகளே அதிகம் படமாக்கப்பட்டுள்ளன.

துவம்சம் செய்யும் ஹீரோக்கள்
மேலும் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களையும் ஹீரோக்கள் துவம்சம் செய்வார்கள். அதுபோன்ற படங்களில் தான் ஹீரோயிஸமும் தெரியும். ஆகையால் நிச்சயம் இந்தப் படம் ஹீரோவை பீஸ்ட் மோடுக்கு மாற்றி வில்லன்கள் தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொள்ளும் படமாக இது இருக்கும் என தெரிகிறது.

சைக்கோ த்ரில்லர்
மேலும் படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது என்பதும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தெளிவாக தெரிகிறது. Beast என்ற எழுத்திலும் கோடரி போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளதால் இது பழிவாங்கும் ஒரு கதையாக சைக்கோ த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











