»   »  தனுஷ், கவுதம் மேனன் இடையே 'கா, ப, து, ம' தான் பிரச்சனையாம்

தனுஷ், கவுதம் மேனன் இடையே 'கா, ப, து, ம' தான் பிரச்சனையாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ளாமல் இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. காதலுக்காக தனுஷ் தோட்டாவை ஏற்கத் துணியும் கதை.

உற்சாகமாக துவங்கிய படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

டீஸர்

டீஸர்

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீஸர் மற்றும் மறுவார்த்தை பேசாதே பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தனுஷ்

தனுஷ்

எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வது இல்லை. அவர் தான் இயக்கும் பவர் பாண்டி பட வேலைகளில் பிசியாக உள்ளார். படத்தை முடிக்கப் போகிறார்.

கவுதம்

கவுதம்

தனுஷ் மற்றும் கவுதம் மேனன் இடையே பிரச்சனை அதனால் தான் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்புக்கு வராததன் காரணம் தெரிய வந்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

கவுதம் தனுஷுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். அதனால் தான் அவர் படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திவிட்டாராம். கவுதமின் தயாரிப்பு நிறுவனம் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பது இல்லை படத்தை வெளியிட்டு அதில் வரும் லாபத்தில் தனுஷுக்கு சம்பளம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாம்.

English summary
According to reports, Dhanush has stopped acting in ENPT as director Gautham Menon has not paid his salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil