twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதென்ன புதுக்கதை..பாரதியாரும், காந்தியும் இந்தியனே இல்லை..வெற்றிமாறனை வம்பிழுக்கும் சீரியல் நடிகர்

    |

    பொன்னியின் செல்வன் படம் வெளியான பின்பு வெற்றிமாறன் சோழ மன்னன் குறித்து பேசிய பேசு பொருளானது.

    திரைத் துறையில் வெற்றிமாறன் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் திரைப்பட துறையினர் தொடர்ந்து வாதம் வைத்து வருகிறார்கள். வெற்றி மாறனின் பேச்சு அரசியல் ரீதியாகவும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் வருகிறது.

    இந்நிலையில் வெற்றி மாறனை வம்பிழுக்கும் வகையில் ரஜினியின் எந்திரன் படத்தில் நடித்த நடிகர் ராகவ் ரங்கநாதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மாலத்தீவில் சோலோவாக காட்சியளித்த ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா எங்கேம்மான்னு கலாய்க்கும் ஃபேன்ஸ்! மாலத்தீவில் சோலோவாக காட்சியளித்த ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா எங்கேம்மான்னு கலாய்க்கும் ஃபேன்ஸ்!

    வெற்றிமாறனின் பேச்சு

    வெற்றிமாறனின் பேச்சு

    பொன்னியின் செல்வன் படம் வெளியானதிலிருந்து பலவித சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. பொன்னியின் செல்வன் படம் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக காட்சிப்படுத்துகிறார்கள், அந்த காலத்தில் இந்து மதம் என்று ஒன்று இல்லை சைவம், வைணவம் என்று மட்டுமே இருந்தது ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அவரை தங்களுடைய அரசனாக காண்பிக்க முயல்கிறார்கள் என்று பேசியிருந்தார்.

    வெற்றிமாறன் பேச்சுக்கு ஆதரவு-எதிர்ப்பு குரல்கள்

    வெற்றிமாறன் பேச்சுக்கு ஆதரவு-எதிர்ப்பு குரல்கள்

    இதில் வெற்றிமாறன் பேச்சுக்கு உடனடியாக அரசியல் கட்சித்தலைவர்கள் எதிராகவும், ஆதரவாகவும் பேசினர். வெற்றிமாறன் பேச்சுக்கு இயக்குனர் பேரரசு, குஷ்பூ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக விவாத பொருளாக மாறி உள்ள நிலையில் இன்று நடிகர் சரத்குமார் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது போன்ற வீண் விவாதங்கள் நடக்கிறது. சோழ மன்னன் இந்துவா? இல்லையா? சைவம், வைணவம் இருந்ததா? ஒன்றுபட்ட இந்தியா இருந்ததா? என்றெல்லாம் தேவையற்ற சர்ச்சைகளில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

    சரத்குமாரின் ஆதங்கம்

    சரத்குமாரின் ஆதங்கம்

    மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சூழ்நிலையில் கால நிலை மாற்றம், பருவநிலை மாற்றம், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் விஷயங்களை, பொதுமக்களை பாதிக்கும் விஷயங்களை பேச வேண்டும். அதை விட்டுவிட்டு இது போன்ற வீண் சர்ச்சைகளுக்குள் இறங்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் வெற்றிமாறன் பேசியதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து ஆதரித்தும், எதிர்த்தும் பேசி வருகிறார்கள்.

    ரஜினியின் எந்திரன் பட நடிகர்

    ரஜினியின் எந்திரன் பட நடிகர்

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ள சீரியல் நடிகர் ராகவ் ரங்கநாதன் வெற்றிமாறனுக்கு பதிலாக தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவர் டிவி சீரியலிலும் நடித்து புகழ்பெற்றவர். வெற்றிமாறன் சொன்னதற்கு பதிலடியாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், "வெற்றி மாறன் சோழ மன்னனை பற்றி கூறும் பொழுது சோழ மன்னனை இந்து மன்னனாக சித்தரிக்கிறார்கள். அவர் காலத்தில் இந்து மதம் என்று ஒன்று இல்லை சைவம், வைணவம் மட்டும் இருந்தது என்று தெரிவித்துள்ளார், அப்படியானால் பாரதியார், காந்தி போன்றவர்களும் இந்தியர்கள் அல்ல ஏனென்றால் அவர்கள் காலத்தில் இந்தியா என்று ஒரு நாடு இருந்ததில்லை. அவர்கள் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் குடிமக்களாக இருந்தவர்கள். அவர்கள் இறந்த பின் தான் இந்தியா வந்தது. ஆகவே அவர்களை இந்தியர்கள் இல்லை என்று சொல்லலாமா?" என்று கேட்டுள்ளார்.

    காந்தியும் பாரதியாரும் இந்தியர் இல்லை

    காந்தியும் பாரதியாரும் இந்தியர் இல்லை

    பாரதியார் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே மறைந்து விட்டார். ஆனால் காந்தி சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு உருவான பின், இந்தியா என்ற நாடு உருவான பின் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பற்றி அடிப்படை விஷயங்கள் புரியாமல் இவர் இத்தகைய கேள்வியை வைத்துள்ளார் என்று சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    English summary
    What is this new story.. Bharatiyar and Gandhi are not Indian.. Serial actor questioning Vetrimaran. After the release of Ponniyin Selvan, Vetrimaran became the subject of talk about Chola king. The film industry has been arguing for and against Vetrimaran's speech in the film industry. Vetri Maran's speech comes politically in support and opposed. In this case, actor Raghav Ranganathan, who acted in Rajinikanth's film Enthiran, has released a video about his Vetrimaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X