என்னது...தளபதி 66 படத்தில் இந்த டாப் ஹீரோவா... மிரள வைக்கும் அட்டகாச அப்டேட்

சென்னை : விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படும் ஸ்டாரின் பெயரை கேட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே ஆடிப் போய் உள்ளது.

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் பேனரில் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

சென்னையில் தளபதி 66

சென்னையில் தளபதி 66

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகிபாபு, சங்கீதா கிருஷ், சம்யுக்தா ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றது. முதல்கட்ட ஷுட்டிங் சமீபத்தில் முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் விரைவில் சென்னையில் துவங்கப்பட உள்ளது.

இரட்டை வேடத்தில் விஜய்

இரட்டை வேடத்தில் விஜய்

தளபதி 66 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக மெஹ்ரின் பிர்சோடா நடிக்க உள்ளதாகவும், இதில் விஜய் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிப்பதால் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தளபதி 66 படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டாலும், ஷுட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரெடி

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரெடி

தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22 ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கிட்டதட்ட தயாராகி விட்டதாம். இதற்கான போட்டோஷுட் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

என்னது...இவரும் நடிக்கிறாரா

என்னது...இவரும் நடிக்கிறாரா

படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், படத்தில் அடுத்ததாக இணைந்துள்ள நட்சத்திரம் பற்றிய தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. லேட்டஸ்ட்டாக வந்துள்ள உறுதியற்ற தகவலின் படி, தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ் பாபு தளபதி 66 படத்தில் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X