என்ன சொல்றீங்க...தளபதி 66 படத்தில் விஜய் இதை செய்யவே மாட்டாரா...அப்புறம்?
சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சமயத்தில் படத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் விஷயத்தை விஜய் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளனர்.
நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தின் நடித்து வரும் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதுவரை வெளியான தகவலின் படி, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தளபதி 66 ஷுட்டிங்
தளபதி 66 படத்தின் பூஜை ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெகு சில நாட்கள் மட்டுமே சென்னையில் முதல் கட்ட ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் மே 3 ம் தேதி ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறதாம்.

விஜய் பாட்டு பாடுகிறாரா
இந்த செட்டில் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம். இதை முடித்த பிறகு சென்னையிலும் ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து, அங்கு தான் பாடல் காட்சிகளை படமாக்க போகிறார்களாம். இந்த படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியை தமன் ஏற்கனவே துவங்கி விட்டாராம். இந்த படத்தில் விஜய் சொந்த குரலில் ஒரு பாடல் பாட உள்ளதாகவும், இதற்கான ரெக்கார்டிங்கும் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

படக்குழுவின் செம பிளான்
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், அப்பாவாக சரத்குமாரும், அண்ணனாக ஷாமும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த நடிகர்-நடிகைகள் தேர்வும் முடிந்து விட்டதாம். அதே சமயம் யாரெல்லாம் நடிக்கிறார்கள், என்ன ரோல்களில் நடிக்கிறார்கள் என்ற தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்களாம். படத்தின் கதை லீக் ஆகி விடக்கூடாது என்பதால் தான் இந்த ஏற்பாடாம்.

விஜய் இதை செய்ய மாட்டாரா
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஆக்ஷன் காட்சிகளே இல்லையாம். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், எமோஷனல் படமாம். படத்தில் 90 களில் இருந்த விஜய்யின் நடிப்பு முகத்தை மட்டுமே பார்க்க முடியுமாம். 2000 ஆண்டுகளில் வந்த டைரக்டர்கள் அனைவரும் விஜய்யை ஆக்ஷன், மாஸ் ஹீரோவாக மட்டுமே காட்டியதால் அவரின் நடிப்பு திறமை மறைக்கப்பட்டு விட்டதாம். ஆனால் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான கதையாக இருப்பதால் தான் இந்த படத்திற்கு விஜய் ஓகே சொன்னாராம்.

இது தான் விஷயமா
படத்தில் சண்டை காட்சிகளே இல்லை என்பதால் தான் தளபதி 66 படத்திற்கு ஸ்டண்ட் யார் என்பதை மட்டும் இதுவரை முடிவு செய்யவேயில்லையாம். இரண்டாம் கட்ட ஷுட்டிங் முடிந்த பிறகு படம் பற்றி அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்திற்கு செய்ததை போல், விஜய்யின் பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடலாமா என படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











