என்ன சொல்றீங்க...வாரிசு படத்தில் இன்னொரு டைரக்டரா...விஜய் தான் இதற்கு காரணமா?
சென்னை : விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் விஜய் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது.
வாரிசு படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதே சமயம் நெட்டிசன்கள் இதை ரஜினி பட காப்பி என விமர்சித்தனர். இந்த படத்தின் கதையும் பிரெஞ்சு படத்தின் காப்பி தான் என சொல்லப்பட்டு வருகிறது.
ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். தமன் இசை அமைக்கிறார். சென்னை, ஐதராபாத் என மாறி மாறி இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போ என்ன ஷுட்டிங் நடக்குது
வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.தற்போது ஐதராபாத்தில் நடக்கும் ஷுட்டிங்கில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து லீக்காகும் வாரிசு காட்சிகள்
வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் மீண்டும் மீண்டும் கசிந்து வருவதால் ரசிகர்கள் செம அப்செட் ஆகி உள்ளனர். ஏற்கனவே சென்னையில் நடந்த ஷுட்டிங் போட்டோக்கள் இணையத்தில் கசிந்ததால், அந்த சீன்களை மறுபடியும் எடுக்க டைரக்டர் முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது மீண்டும் ஐதரபாத்தில் நடக்கும் ஷுட்டிங் ஸ்டில்களும் கசிந்துள்ளன.

ஆகஸ்ட்டில் ஷுட்டிங் முடியுதா
இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்தில் வாரிசு படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, பிரேக் எடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு பிறகு அக்டோபரில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் வேலைகளில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

என்னது இன்னொரு டைரக்டரா
வாரிசு படத்தில் ஏற்கனவே சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சங்கீதா கிருஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த சமயத்தில், இந்த படத்தில் நடிகரும், டைரக்டருமான எஸ்.ஜே.சூர்யாவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் டைரக்டர் செல்வராகவன் இணைந்து நடித்தார். இந்நிலையில் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

எல்லாம் விஜய் பார்த்த வேலை தானா
விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மெர்சல் படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்தார். தற்போது மாநாடு,டான் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் வாரிசு படத்திலும் அவரை நடிக்க வைக்க டைரக்டர் வம்சியிடம் விஜய் தான் ரெக்கமன்ட் செய்தாராம். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அவருக்கும் படித்திருந்ததால் வாரிசு படத்திலும் மிக முக்கிய கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











