என்ன சொல்றீங்க இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா? அதுவும் இவங்க ரெண்டு பேரா.. ஷாக்கில் ரசிகர்கள்!

சென்னை: கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேரை கமல் வெளியே அனுப்பப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன

இந்த சீசனில் 18 போ உடன் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு வைல்டு கார்டு என்ட்ரியுடன் மொத்தம் 20 ஹவுஸ்மேட்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடத்தப்பட்டது.

வருண் மற்றும் அக்‌ஷரா கடந்த வாரம் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என தெரிகிறது.

20 பேர்

20 பேர்

கடந்த அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, சின்ன பொண்ணு, மதுமிதா, நாடியா சங், அபிஷேக் ராஜா, அபிநய், அக்‌ஷரா, வருண், சுருதி, பாவனி, ராஜு, பிரியங்கா, சிபி, இமான் அண்ணாச்சி, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் இசைவாணி என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

2 வைல்டு கார்டு என்ட்ரி

2 வைல்டு கார்டு என்ட்ரி

அபிஷேக் ராஜா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில், அடுத்ததாக இரு ஆண் போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். சின்னத்திரை நடிகரும் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் மற்றும் நடன இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்று வீட்டின் மக்கள் தொகையை மேலும் அதிகரித்தனர்.

டபுள் எவிக்‌ஷன்

டபுள் எவிக்‌ஷன்

கடந்த சில வாரங்களாகவே டபுள் எவிக்‌ஷன் குறித்து பீடிகை போட்டு வந்த கமல் கடந்த வாரம் வருண் மற்றும் அக்‌ஷராவை ஜோடியாக வெளியேற்றி ரசிகர்களை அதிர வைத்தார். இந்நிலையில், இந்த வாரமும் அதே போல டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் அந்த இருவர்

யார் அந்த இருவர்

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடைசி வரை போராடிய மூன்று பேரில் அமீர் டிக்கெட்டை வென்று விட்டார் என தகவல்கள் கசிந்த நிலையில், கடைசி வரை அதற்காக போராடிய சிபி மற்றும் சஞ்சீவ் தான் இந்த வாரம் அதிரடியாக வெளியேற போகின்றனர் என்கிற ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. அன் அஃபிஷியல் போலிங்கில் சிபி, சஞ்சீவ் மற்றும் அமீர் தான் கடைசி மூன்று இடங்களில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபி இருக்கணும்

சிபி இருக்கணும்

சஞ்சீவ் வெளியேறுவது குறித்து ரசிகர்கள் யாருமே கவலைப்படவில்லை. ஆனால், சிபி இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேறக் கூடாது என்றும் இந்த வாரம் முழுக்க நரித்தனமாக விளையாடி வரும் நிரூப் தான் வெளியேற வேண்டும் என்றும் பாவனியை வெளியே அனுப்புங்க என்றும் சில ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

டாப் 5 ஃபைனலிஸ்ட்

டாப் 5 ஃபைனலிஸ்ட்

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்து சிபி மற்றும் சஞ்சீவ் வெளியேற்றப்பட்டால் அடுத்த வாரம் பாவனி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என்றும் கடைசி வாரத்திற்குள் அமீர், பிரியங்கா, ராஜு, நிரூப் மற்றும் தாமரை நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக எதையுமே இந்த சீசனில் எதிர்பார்க்க முடியாது போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X