»   »  ரஜினி ஜோடியாக பில்லா படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா

ரஜினி ஜோடியாக பில்லா படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் ஜோடியாக பில்லா படத்தில் நடிக்க மறுத்ததாக ஜெயலலிதா தெரிவித்தார்.

25.5.1980 காஸ் பாத் என்ற நாளிதழில் ஜெயலலிதா மீண்டும் திரையுலகிற்கு வர போராடிக் கொண்டிருப்பதாக செய்தி வெளியானது. இதை பார்த்த அவர் அந்த நாளிதழுக்கு விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது,

போராடவில்லை

போராடவில்லை

நான் கோலிவுட்டில் மீண்டும் நுழைய போராடவில்லை. எனக்கு சினிமா படங்களில் நடிக்கும் ஆசை போய்விட்டது. அதனால் நான் படங்களில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை.

பில்லா

பில்லா

ரஜினிகாந்தின் பில்லா படத்தில் நடிக்க என்னை தான் தயாரிப்பாளர் பாலாஜி முதலில் அணுகினார். நான் நடிக்க மறுத்த பிறகே அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியா நடித்தார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

நான் மீண்டும் சினிமாவுக்கு வரத் துடித்திருந்தால் தேடி வந்த பில்லா பட வாய்ப்பை தட்டிக்கழிப்பேனா?. நான் நிறைய நல்ல நல்ல பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருகிறேன்.

நிதி

நிதி

கடவுளின் அருளால் எனக்கு போதிய பணம் உள்ளது. என் மீதமுள்ள வாழ்நாளை ராணி போன்று வாழ முடியும். எனக்கு இனியும் சினிமாவில் விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்பியே இந்த விளக்கம்.

English summary
Jayalalithaa once refused to act in Rajinikanth's superhit movie Billa.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil