Don't Miss!
- News
உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே
- Sports
விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??
- Lifestyle
இந்த 4 ராசிக்காரர்களால் காதலில் ஏமாற்றாமல் இருக்க முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காசு வந்துட்டா புள்ளைங்களுக்கு மனப்பான்மை மாறிடும்... விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நான் கடவுள் இல்லை.
நடிகர்கள் சமுத்திரக்கனி, சரவணன் மற்றும் நடிகைகள் இனியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றியும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருக்கிறார்
மிரட்டலான படத்தில் நாட்டுப்புற பாடல்.. சர்தார் படத்திற்காக கலக்கலாக பாடிய நடிகர் கார்த்தி!

மதம் சார்ந்த பெயர்
நடிகர் விஜய் ஏதாவது கருத்து கூறினால் உடனே ஜோசஃப் விஜய் என்று சிலரால் விமர்சிக்கப்படுவார். இப்படிப்பட்ட மதம் சார்ந்த பெயர் வைப்பதற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் என்கிற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்னுடைய படங்களின் கதாநாயகர்களுக்கு கூட பெரும்பாலும் விஜய் என்கிற பெயர்தான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே வைப்பேன்.

ஜோசஃப் விஜயவேல்
எனது அம்மா கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஜோசஃப் என்பதை அவர் வைக்க விருப்பப்பட்டார். அதேபோல எனது மாமனாருக்கு விஜயவேல் என்கிற பெயர் வைக்க வேண்டும் என்று ஆசை. அவர் இருந்தவரை நடிகர் விஜய்யை விஜய்வேல் என்றுதான் கூப்பிடுவார். நான் வடபழனி கோவிலில் வைத்துதான் ஜோசஃப் விஜய் என்கிற பெயரை வைத்தேன். அதுவே நான் மத சார்பற்றவன் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.

அப்பா மகன் பிடிவாதம்
நீங்கள் தொடர்ச்சியாக படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது ஏன் உங்கள் மகன் விஜய்யை வைத்து படம் இயக்குவதில்லை என்ற கேள்விக்கு, நானும் பிடிவாதக்காரன் எனது மகனும் பிடிவாதக்காரன். எனக்கும் அதிகமாக கோபம் வரும் விஜய்க்கும் அதிகமாக கோபம் வரும். அது மட்டுமின்றி அவரை இயக்குவதற்கு இளம் இயக்குநர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். விஜய்யின் தரத்தை அவர்கள் எங்கேயோ கொண்டு செல்கிறார்கள். அதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை என்று கூறியிருக்கிறார்.

பணம் வந்தால் குணம் மாறும்
நாங்கள் இருவரும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒரு கட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அவர்களுடைய ஆட்டிடியூட் மாறிவிடும். இது எல்லார் வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படி இருக்கும் சூழ்நிலையில் நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் தற்சமயம் இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை என்று விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் கூட சந்திரசேகர் மற்றும் சோபாவிற்கு நடந்த சதாபிஷேக விழாவில் விஜய் கலந்து கொள்ளாதது விமர்சிக்கப்பட்டது.