twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும்? - விஷால் சொல்லும் பதில்

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஸ்ட்ரைக்கை பற்றி!- வீடியோ

    சென்னை : தமிழ் சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் பல ஸ்ட்ரைக் காரணமாக வெளியாகாமல் காத்திருக்கின்றன. இந்த விவகார்த்தில் வெகு விரைவில் முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

    கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் மூன்று நாட்களில் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

    When will strike comes to end - vishal

    நேற்று தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 7 மணி நேரம் நடந்துள்ளது.

    இதுகுறித்து விஷால் கூறியதாவது, திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தோம். இந்தப் பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதால் இதற்கான முடிவு இன்னும் மூன்று நாட்களில் தெரியவரும்" என்று கூறினார்.

    ரிலீஸுக்கு தயாராக ஏற்கெனவே கிட்டத்தட்ட 50 படங்கள் வரிசையில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்சார் செய்யத் தயார் நிலையில் சுமார் 20 படங்கள் உள்ளன. எனவே இன்னும் ஸ்ட்ரைக் நீடித்தால் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் விரைவில் ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு அனைத்து தரப்பினர்களூம் முயற்சித்து வருகின்றனர்.

    பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த சில படங்கள் தேதி தள்ளிவைப்பு காரணத்தில் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் முதலில் தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் படங்களை தயாரிப்பாளர் சங்கம் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

    English summary
    Producers council president Vishal says about tamil cinema strike. When will strike comes to end?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X