தளபதி 67–விக்ரம் 3–கைதி 2...லோகேஷின் முதல் சாய்ஸ் இது தானா ?

சென்னை : அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள முக்கியமான மூன்று படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்க போவது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகி விட்டது. இவற்றில் எந்த படத்தை லோகேஷ் முதலில் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதை விட பெரிதாகவே உள்ளது.

கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது கமலின் விக்ரமையும் மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால் லோகேஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலக சினிமா ரசிகர்கள் விக்ரம் படத்தை கொண்டாடி வருவதால் லோகேஷ் கனகராஜ் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

500 கோடி கிளப்பில் இணையுமா விக்ரம்

500 கோடி கிளப்பில் இணையுமா விக்ரம்

ஜுன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 109 கோடி வசூலை தாண்டி உள்ளது. வார நாட்களில் குறைவாகவும், வார இறுதி நாட்களில் பல மடங்கு அதிகமாகவும் விக்ரம் வசூல் இருந்து வருகிறது. இதனால் இனி வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரித்து, விரைவில் 500 கோடி கிளப்பில் விக்ரம் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைஃப் டைம் பாராட்டு

லைஃப் டைம் பாராட்டு

விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷை ட்விட்டரில் பாராட்டிய கமல், நேற்று தானே கைப்பட எழுதியும் பாராட்டி உள்ளார். இந்த கடிதத்தை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்து எந்த படத்தை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

லோகேஷின் அடுத்த படம் எது

லோகேஷின் அடுத்த படம் எது

கைதி 2 இயக்க உள்ளதாக லோகேஷ் ஏற்கனவே கூறி விட்டார். விக்ரம் 3 தயாராக உள்ளதாக கமல் அறிவித்து விட்டார். இதற்கிடையில் விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போகிறார் என்ற தகவல் அடிப்பட்டது. இதையும் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜே கன்ஃபார்ம் செய்து விட்டார். ஆனால் இந்த 3 படங்களில் எந்த படத்தை லோகேஷ் இயக்க போகிறார் என்பது தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs
இதுதான் ஃபர்ஸ்ட் சாய்சா

இதுதான் ஃபர்ஸ்ட் சாய்சா

லேட்டஸ்ட் தகவலின் படி, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை தான் இயக்க போகிறாராம். தளபதி 67 படத்தை முடித்த பிறகு தான் விக்ரம் 3 படத்தை இயக்க போகிறாராம். தளபதி 67 படத்தை முடித்து விட்டு, 2023 ம் ஆண்டின் மத்தியில் தான் விக்ரம் 3 வேலைகளை துவக்க போகிறாராம். அதற்கு பிறகு தான் அடுத்தடுத்த அப்டேட்கள் வர போகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X